Search
  • Follow NativePlanet
Share
» »கொச்சி டூ மும்பை = 36 சுற்றுலாத் தலங்கள்!!!

கொச்சி டூ மும்பை = 36 சுற்றுலாத் தலங்கள்!!!

By Staff

மும்பை அருகே உள்ள பன்வேல் நகரையும், கேரளாவின் கொச்சி நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 17-ல் பயணம் செய்வதன் மூலம் நாம் சில அட்டகாசமான சுற்றுலாத் தலங்களை பார்க்க முடியும்.

1296 கி.மீ நீளம் கொண்ட இந்தச் சாலை இந்தியாவின் 7-வது நீளமான தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்தச் சாலை கோவா தலைநகர் பனாஜி, கர்நாடகாவின் மங்களூர், கேரளாவின் கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் கொச்சி வழியாக செல்கிறது.

கொச்சி ஹோட்டல்களும், கொஞ்சம் டீல்களும்!

மும்பை ஹோட்டல்களும், கொஞ்சம் டீல்களும்!

கொச்சி

கொச்சி

கொச்சியிலிருந்து கிளம்புவதற்கு முன் கொச்சியின் முக்கிய சுற்றுலாத் தலங்களை தெரிந்துகொள்வோம்.

கொச்சியின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Jorge Royan

மூணார்

மூணார்

கேரளாவின் முதன்மையான ஹனிமூன் ஸ்தலமாகவும், இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹனிமூன் ஸ்தலங்களில் ஒன்றாகவும் மூணார் மலைப்பிரதேசம் திகழ்ந்து வருகிறது. இதன் ஆர்பரிக்கும் அருவிகள், பசுமையான மலைகள், பச்சை தேயிலை தோட்டங்கள் என்று அனைத்துமே காதலர்களுக்காக படைக்கப்பட்டது போலவே அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.

மூணாரின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Bimal K C

கொடுங்கல்லூர் பகவதி கோயில்

கொடுங்கல்லூர் பகவதி கோயில்

திரிசூர் மாவட்டத்தின் சிறிய நகரமான கொடுங்கல்லூரில் இந்த பகவதி கோயில் அமைந்துள்ளது. இந்த பகவதி அம்மன்தான் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் கண்ணகி என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது. அதாவது சேர மன்னன் ஒருவன் இங்கு கண்ணகிக்கு கோயில் எடுப்பித்ததாக சொல்லப்படுகிறது.

கொடுங்கல்லூரின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Aruna Radhakrishnan

குருவாயூரப்பன் கோயில்

குருவாயூரப்பன் கோயில்

இந்தியாவிலேயே அதிக மக்களால் தரிசிக்கப்படும் கோயில்களில் 4-வது கோயில் எனும் பெருமையை குருவாயூரப்பன் கோயில் பெற்றுள்ளது. இங்கு மஹா விஷ்ணு கிருஷ்ண அவதாரத்தின் பாலகோபால ரூபத்தில் குடிகொண்டுள்ளார். இந்த கோயிலில் கிருஷ்ணலீலாக்கள் எனப்படும் கிருஷ்ணரின் இளம் பருவக்கதைகள் சுவர்களில் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. இக்கோயிலில் பலவித கர்நாடக இசைக்கச்சேரிகளும் பாரம்பரிய கேரள நடனக்கலை வடிவங்களும் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.

குருவாயூரின் சுற்றுலாத் தலங்கள்

கோழிக்கோடு

கோழிக்கோடு

சுள்ளிக்காடு, கள்ளிக்கோட்டை என்று முன்னர் தமிழர்களால் அழைக்கப்பட்ட அழகிய கடற்கரை நகரம் கோழிக்கோடு. ஆனால் 'கோயில் கோட்டை' என்று பொருள்படும்படி கோழிக்கோடு என்றே மலையாளிகள் இதை அழைக்கின்றனர்.

கோழிக்கோடின் சுற்றுலாத் தலங்கள்

படம் : MGA73bot2

காப்பாடு பீச்

காப்பாடு பீச்

கோழிக்கோடு நகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள காப்பாடு கடற்கரைதான் 1498-ஆம் ஆண்டில் வாஸ்கோடகாமா முதன் முதலாக இந்தியாவில் கால் பதித்த இடம். வாஸ்கோட காமா இந்தக் கடற்கரையில் கால் வைத்ததன் ஞாபகச்சின்னம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அதில் "கப்பக்கடவு எனும் இந்த ஸ்தலத்தில் ‘வாஸ்கோட காமா' 1498-ஆம் ஆண்டு வந்திறங்கினார்" எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

கோழிக்கோடின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Dijaraj Nair

முழுப்பிளாங்காட் பீச்

முழுப்பிளாங்காட் பீச்

இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆசியாவின் ஒரே டிரைவ் இன் பீச் (அலைகளுக்கு வெகு அருகில் வாகனங்களை ஓட்ட முடியும்) என்ற பெருமையை இந்த முழுப்பிளாங்காட் பீச் பெற்றுள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் பீச் திருவிழாவை ஆயிரக்கணக்கான இளைஞர்களும், சாகச பயணிகளும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்தக் கடற்கரை தலச்சேரியிலிருந்து 8 கி.மீ தூரத்திலும், கண்ணூர் நகரத்திலிருந்து 16 கி.மீ தொலைவிலும் அமைத்துள்ளது.

கண்ணூரின் சுற்றுலாத் தலங்கள்

பேக்கல் கோட்டை

பேக்கல் கோட்டை

காசர்கோட் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான பேக்கலில் அமைந்துள்ள பேக்கல் கோட்டை, பனை மரங்களால் சூழப்பட்ட, ஓய்வின்றி அலைகள் வந்து மோதிக்கொண்டே இருக்கும் இரண்டு கடற்கரைகளுக்கு மத்தியில் கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. பேக்கல் கோட்டையின் வெளிப்புறங்கள் பாதிக்கு மேலாக கடல் நீரில் மூழ்கிவிட்டன. எனவே கடல் அலைகள் எப்போதும் கோட்டையை வந்து முத்தமிட்ட வண்ணமே இருக்கும். இந்தக் கோட்டை 40 ஏக்ரா பரப்பளவில் பரந்து விரிந்து கிடப்பதோடு, கேரளாவின் மிகப்பெரிய கோட்டையாகவும் இதுவே கருதப்படுகிறது.

பேக்கலின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Joseph Lazer

மங்களூர்

மங்களூர்

கர்நாடகத்தின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் எழில் வாய்ந்த மங்களூர் நகரமானது கரு நீலத்தில் காட்சியளிக்கும் அரபிக்கடலுக்கும், உயர்ந்து ஓங்கி நிற்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடருக்கும் இடையே அமைந்திருக்கிறது.

மங்களூரின் சுற்றுலாத் தலங்கள்

உடுப்பி

உடுப்பி

கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி, அதன் உணவுச்சுவைக்கும், கிருஷ்ணர் கோயிலுக்கும் பெயர் பெற்று விளங்குகிறது. உடுப்பி என்ற பெயரைக் கேட்டாலே நாவில் எச்சில் ஊறும் அளவுக்கு மத்வா இனத்தவரின் தென்னிந்திய பாணி உணவுத்தயாரிப்பு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவர்கள் காலங்காலமாக தெய்வப்பிரசாதங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இன்றும் அந்த சம்பிரதாயத்தை கடைப்பிடிப்பவர்கள்.

உடுப்பியின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Vaikoovery

மால்பே கடற்கரை

மால்பே கடற்கரை

உடுப்பியிலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மால்பே கடற்கரை ஒரு மீன்பிடி துறைமுகமாகவும் விளங்குகிறது. எனவே இந்தக் கடற்கரையிலிருந்து பார்த்தால் மால்பே கப்பல் கட்டும் தளமும் காட்சிக்கு தெரிகின்றது. இந்த கடற்கரைப் பகுதியில் படகுச்சவாரி, தூண்டில் மீன் பிடித்தல், அலைச்சறுக்கு விளையாட்டு, போன்ற பல வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.

படம் : Neinsun

ஆனேகுட்டே விநாயகர் கோயில்

ஆனேகுட்டே விநாயகர் கோயில்

உடுப்பியிலிருந்து 31 கி.மீ தொலைவில் உள்ள ஆனேகுட்டே விநாயகர் கோயில் பரசுராமரால் கட்டப்பட்ட கோயிலாகவே நம்பப்படுகிறது. இங்கு வெள்ளியால் உருவாக்கப்பட்ட விநாயகக்கடவுள் பிரமாண்டமாக காட்சி அளிக்கின்றார். இந்த விக்கிரகம் பற்றிய ஒரு முக்கியமான அம்சம் இது நின்ற கோலத்தில் காட்சியளிப்பதாகும்.

உடுப்பியின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Raghavendra Nayak Muddur

மரவந்தே

மரவந்தே

மரவந்தே நகரம் தனது வலது புறத்தில் அரபிக்கடலையும், இடது புறத்தில் சௌபர்ணிகா நதியையும் கொண்டு, அதன் நடுவே ஒரு சொர்க்க பூமியாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. மரவந்தே கடற்கரை மனிதனின் கால்தடம் படாமல் பல மைல்கல் பரந்து விரிந்து கிடக்கும் வெள்ளை மணற்பரப்பின் புனிதத் தன்மையை குறிக்கும் விதமாக கன்னிக் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது.

மரவந்தேவின் சுற்றுலாத் தலங்கள்

கொல்லூர்

கொல்லூர்

கர்நாடக மாநிலத்தின் குந்தாப்பூர் தாலுக்காவில் அமைந்துள்ள சிறிய நகரமான கொல்லூர், தேவி மூகாம்பிகையின் கோயில் காரணமாக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களையும், பயணிகளையும் ஈர்த்து வருகிறது.

கொல்லூரின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Premkudva

கோகர்ணா

கோகர்ணா

கர்நாடக மாநிலத்தின் உத்தரகன்னட மாவட்டத்தில் அமைந்திருக்கும் கோகர்ணா நகரம் ஒரு முக்கிய ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாகவும், இங்குள்ள அழகிய கடற்கரைகளுக்காக ஒரு உல்லாச சுற்றுலா மையமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

கோகர்ணாவின் சுற்றுலாத் தலங்கள்

கோவா

கோவா

இந்தியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில், மதுவுண்ட மயக்கமா இல்லை கவின் கடல் கண்ட கிறக்கமா என்ற பாகுபாடில்லாமல் பதின் வயதினரும், பல்லாண்டு வாழ்ந்தவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இடம் ஒன்று உண்டெனில் அது கண்டிப்பாக கோவாவாகத்தான் இருக்க முடியும்.

கோவாவின் சுற்றுலாத் தலங்கள்

ஷில்ப்கிராம்

ஷில்ப்கிராம்

கலைப் பொருட்கள் உற்பத்திக்காகவும், கைத்தொழில் வளர்சிக்காகவும் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டத்தின் வடிவம்தான் ஷில்ப்கிராம். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சாவந்த்வாடி நகருக்கு அருகிலுள்ள இந்த சிறிய கிராமத்தில் எண்ணற்ற கைவினை பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இங்கு வரும் பயணிகள் அற்புதமான படைப்புகளை உருவாக்கும் கலைஞர்களின் கைவண்ணத்தை நேரில் காணும் அறிய வாய்ப்பை பெறுவது மட்டுமில்லாமல், அவர்கள் கண்முன்னே உருவான பொருளையே அவர்கள் வாங்கிச் செல்லலாம். குறிப்பாக இங்கு தயாரிக்கபடும் காஞ்சிஃபா கார்ட்ஸ், அலங்கரிக்கப்பட்ட வளையல்கள் மற்றும் நகைபெட்டிகள் போன்ற அரிய பொருட்கள் பயணிகளிடையே மிகப்பிரபலம்.

சாவந்த்வாடியின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Nilesh2 str

பெல்காம்

பெல்காம்

பெங்களூருக்கு அடுத்து கர்நாடக மாநிலத்தின் 2-வது தலைநகரமாக பெல்காம் மாநகரம் அறியப்படுகிறது. கோகாக் அருவி, கமல் பசாதி ஜைன கோயில், ஹலசி என்ற 1000-ஆம் ஆண்டு கோயில், தூத்சாகர் அருவி ஆகியவை பெல்காமின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக விளங்கி வருகின்றன.

படம் : andeep Prakash

வெங்குர்லா

வெங்குர்லா

மகாராஷ்டிர மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் அமைந்துள்ள வெங்குர்லா நகரம், ஒருபக்கம் முந்திரி, மா, தென்னை, பெர்ரி மரங்களை கொண்ட காடுகள் மற்றும் மலைகளாலும், மறுபக்கம் அரபிக்கடலாலும் சூழப்பட்டு அழகுடன் காட்சியளிக்கிறது.

சிந்துதுர்க்கின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Nilesh2 str

மால்வான்

மால்வான்

மகாராஷ்டிர மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் அமைந்துள்ள மால்வான் நகரம் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது. மால்வான் பகுதியில்தான் வரலாற்று புகழ்பெற்ற சிந்துதுர்க் கோட்டை அமைந்துள்ளது.

சிந்துதுர்க்கின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Sballal

தேவ்கட்

தேவ்கட்

மகாராஷ்டிர மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்கரை நகரமான தேவ்கடில் 70 கிராமங்கள் உள்ளன. இந்த நகரம் அல்ஃபோன்ஸா மாம்பழங்களுக்காக நாடு முழுவதும் பிரபலம்.

சிந்துதுர்க்கின் சுற்றுலாத் தலங்கள்

படம் : G patkar

விஜயதுர்க்

விஜயதுர்க்

மும்பையிலிருந்து 485 கி.மீ தூரத்தில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில் விஜயதுர்க் நகரம் அமைந்துள்ளது. 300 வருடங்களுக்கு முன் 17-ஆம் நூற்றாண்டில் மாமன்னர் சிவாஜியால் கட்டப்பட்ட விஜயதுர்க் கோட்டைக்காக விஜயதுர்க் நகரம் பிரபலமாக அறியப்படுகிறது.

விஜயதுர்க்கின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Ravi Vaidyanathan

கோலாப்பூர்

கோலாப்பூர்

கோலாப்பூர் நகரத்தை மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஆன்மீக அடையாளச் சின்னம் என்றே சொல்லலாம். புராதனமான பழம்பெருமை வாய்ந்த ஆலயங்கள், அமைதி தவழும் பூங்காங்கள், வரலாற்றுப் பின்னணியை உடைய கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் என்று பல அம்சங்களை தன்னுள் கொண்டிருக்கும் இந்த வளம் நிறைந்த நகரம் இந்தியாவின் தேசிய பெருமைகளுள் ஒன்று.

கோலாப்பூரின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Rsmn

ரத்னகிரி

ரத்னகிரி

மஹாராஷ்டிரா மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த ரத்னகிரி நகரம், அரபிக்கடலோரம் அமைந்துள்ள மற்றுமொரு சிறிய அழகிய துறைமுக நகரமாகும்.

ரத்னகிரியின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Nilesh2 str

கணபதிபுலே

கணபதிபுலே

இந்தியாவின் கரிபீயன் கடற்கரை என்று அழைக்கப்படும் கணபதிபுலே நகரம் கொங்கணக் கடற்கரைப்பகுதியில் அமைந்திருக்கிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கடற்கரை நகரம் மும்பையிலிருந்து 375 கி.மீ தூரத்தில் உள்ளது.

கணபதிபுலேவின் சுற்றுலாத் தலங்கள்

மார்லேஷ்வர்

மார்லேஷ்வர்

மஹாராஷ்டிரா மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் மார்லேஷ்வர் நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள குகை சிவன் கோயில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பயணிகளை ஈர்த்து வருகிறது.

ரத்னகிரியின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Pranav

கராட்

கராட்

மஹாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் கொய்னா நதியும், கிருஷ்ணா நதியும் சங்கமிக்கும் இடத்தில் கராட் நகரம் அமைந்துள்ளது. ப்ரீத்தி சங்கமம் என்று அழைக்கப்படும் இந்த சங்கமத்தை காண கண்கோடி வேண்டும்.

சதாராவின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Nilrocks

குஹாகர்

குஹாகர்

மஹாராஷ்டிரா மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய நகரமான குஹாகர், பிரம்மாண்ட அரபிக்கடல் ஒரு புறமும், கம்பீரமான சஹயாத்ரி மலைத்தொடர் மற்றொரு புறமும் இருக்க நடுவில் எழில் உருவமாய் காட்சியளித்துக்கொண்டிருகிறது.

குஹாகரின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Joshi detroit

தாபோலி

தாபோலி

மஹாராஷ்டிரா மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் தாபோலி நகரம் அமைந்துள்ளது. மும்பையிலிருந்து 215 கி.மீ தொலைவில் உள்ள இந்த நகரம் இனிமையான காலநிலையை கொண்டுள்ளது.

ரத்னகிரியின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Munz007

மஹாபலேஷ்வர்

மஹாபலேஷ்வர்

மஹாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் மஹாபலேஷ்வர் ஒரு பிரபலமான மலை வாசஸ்தலமாகும். ரம்மியமான மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள இந்தப் பகுதி உலகில் என்றென்றும் பசுமையாக காணப்படும் இடங்களில் ஒன்று.

மஹாபலேஷ்வரின் சுற்றுலாத் தலங்கள்

ராய்கட் கோட்டை

ராய்கட் கோட்டை

17-ஆம் நூற்றாண்டில் முகலாயர்களை தீவிரமாக எதிர்த்து நின்ற சிவாஜி தனக்கும் தனது படையினருக்குமான பாதுகாப்பான கேந்திரமாக ராய்கட் கோட்டையை உருவாக்கி வைத்திருந்தார். மூன்று புறம் உயரமான மலைச்சிகரங்கள் மற்றும் மலைச்சரிவுகள் மற்றும் ஒரு புறத்தில் காவல் கோபுரங்களுடன் கூடிய வாசல் ஆகியவற்றுடன் இந்தக் கோட்டை ஒரு அற்புதமான பாதுகாப்பு வளாகமாக சிவாஜி மன்னரால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது ராய்கட் மாவட்டத்தில் உள்ளது.

படம் : Swapnaannjames

புனே

புனே

புனித நகரம் என்ற பொருள்படும் புண்ணியநகரா என்ற சொல்லிலிருந்து இந்த புனே என்ற பெயர் பிறந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 560 அடி உயரத்தில் புனே நகரம் அமைந்துள்ளது.

புனேவின் சுற்றுலாத் தலங்கள்

படம்

ஹரிஹரேஷ்வர்

ஹரிஹரேஷ்வர்

ஹரிஹரேஷ்வர் எனும் இந்த சிறிய புராதன நகரம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பிரம்மாத்ரி, புஷ்பாத்ரி, ஹர்ஷினாச்சல் மற்றும் ஹரிஹர் எனும் நான்கு மலைகள் சூழ, கொங்கண் பிரதேசத்தில் ஒருபுறம் பசுமையான வனப்பகுதியும் மறுபுறம் அழகான கடற்கரையும் அருகருகே இருக்க அழகுடன் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

ஹரிஹரேஷ்வரின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Ankur P

அலிபாக்

அலிபாக்

மஹாரஷ்டிராவின் மேற்குக் கடற்கரைப்பகுதியில், ராய்கட் மாவட்டத்தில் அலிபாக் நகரம் அமைந்துள்ளது.

அலிபாக்கின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Rakesh Ayilliath

பன்வேல்

பன்வேல்

மஹாரஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள பன்வேல் நகரம் கொங்கன் பிரதேசத்தின் நுழைவாயிலாக திகழ்ந்து வருகிறது.

படம் : Pradeep717

மும்பை

மும்பை

அட்டகாசமான சுற்றுலாத் தலங்களையெல்லாம் கடந்து இறுதியாக மும்பைக்கு மாநகரத்துக்கு வந்துவிட்டோம். அப்படியே மும்பையையும் சுற்றிப்பார்த்து விட வேண்டியதுதான்!!!

மும்பையின் சுற்றுலாத் தலங்கள்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X