Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அகர்தலா » வானிலை

அகர்தலா வானிலை

செப்டம்பர் மாதம் முதல் மார்ச் வரையிலான பருவமே அகர்தலா நகரத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. வருடம் முழுதுமே மிதமான சூழலுடன் காணப்பட்டாலும் திடீர் பருவநிலை மாற்றங்கள் ஏதுமல்லாமல் காணப்படும் இந்த குளிர்காலத்தில் பயணிகள் சௌகரியமாக சுற்றுலாவில் ஈடுபடலாம். சிறு குளிரை தாங்கும் அளவுக்கான உடைகள் மட்டுமே போதுமானது.

கோடைகாலம்

அகர்தலா நகரத்தில் ஏப்ரல்  முதல் அக்டோபர் வரை கோடைக்காலம் நீடிக்கிறது.  இக்காலத்தில் சராசரியாக 28°C  வெப்பநிலை நிலவுகிறது. கோடைக்காலத்திலும் மழைப்பொழிவு காணப்படுவதால் ஈரமான சூழலுடனும் வெப்பத்துடனும் இப்பகுதி காட்சியளிக்கிறது.  

மழைக்காலம்

புவியியல் ரீதியாக மழைப்பிரதேச அமைப்பை கொண்டிருப்பதால் வருடம் முழுதுமே அதிகமான மழைப்பொழிவை இப்பகுதி பெறுகிறது.

குளிர்காலம்

செப்டம்பர் மாதம் தொடங்கி  மார்ச் மாதம் வரை நிலவும் குளிர்காலத்தின்போது அகர்தலா நகரம் சற்றே உலர்வான  குளுமையான சூழலை பெறுகிறது. காணப்படுகிறது. இக்காலத்தில் சராசரியாக 18°C  வெப்பநிலை நிலவுகிறது.