‘வெச்சார் யுடென்சில்ஸ் மியூசியம்’ அல்லது ‘விஷாலா என்விரான்மென்டல் சென்டர் ஃபார் ஹெரிடேஜ் ஆஃப் ஆர்ட், ஆர்க்கிடெக்சர் அன்ட் ரிசர்ச்’ (கலைப்பாரம்பரியம் மற்றும் கட்டிடக்கலைக்கான ஆராய்ச்சி மையம்) என்ற பெயரிலும் இந்த அருங்காட்சியகம் அழைக்கப்படுகிறது.
மனித இனம் வெவ்வேறு காலகட்டங்களில் பயன்படுத்திய பொருட்களை வைத்து மனித பரிணாம வளர்ச்சியை வகைப்படுத்தும் நோக்கத்துடன் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இது 1981ம் ஆண்டு விஷாலா வில்லேஜ் ரெஸ்டாரண்டுக்கு அருகில் துவங்கப்பட்டிருக்கிறது. சுரைக்குடுக்கை துவங்கி தற்கால ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உலோகம் வரை மனித நாகரிகம் இது நாள் வரை பயன்படுத்தி வந்த உபயோகப்பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
பித்தளை, செம்பு, ஜெர்மன் சில்வர் போன்ற உலோகங்களால் ஆன பல்வேறு உபயோகப்பொருட்களை இங்கு காணலாம்.