முன்னர் சூரிய கோயில் என்று அறியப்பட்ட இந்த கோயில் 9ம் நூற்றாண்டை செர்ந்ததாகும். இதில் ஒரு மண்டபம், ஒரு முன் வாசல் அமைப்பு, ஒரு குடைவறைக்கோயில் மற்றும் ரேக்காநகர(வட இந்திய பாணி) கோபுரம்ஆகியவை காணப்படுகின்றன.
நான்கு மையத்தூண்கள் ஒரு முகமண்டபம் மற்றும் அலங்கார சுவர்த்தூண்கள் போன்றவற்றை தாங்கி இந்த மண்டபம் இருந்திருக்கின்றது. கோயிலின் கர்ப்பகிருகம் இந்த மண்டபத்தின் மைய மற்றும் பின் பிரகாரத்தில் உள்ளது.
11 மற்றும் 12ம் நூற்றாண்டுகளில் இந்த படிகேர குடி கோயிலில் பல மாற்றங்கள் உருவாகியிருக்க வேண்டும் என்று அறியப்படுகிறது. பழைய கோயிலை ஒட்டியே பல சிறு கோயில்கள் மற்றும் ஒரு பீடம் போன்ற கோபுரம் போன்றவை அச்சமயம் உருவாக்கப்பட்டிருக்கிறது.