Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அய்சால் » வானிலை

அய்சால் வானிலை

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவம் அய்சால் நகரத்துக்கு பயண மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. அக்டோபர் மழைக்காலம் முடிந்து விடுவதால் வெளிப்புற சுற்றுலா சுலபமாக இருக்கும். குளிர்காலம் நெடுகவுமே சுற்றுலாவுக்கேற்ற இனிமையான சூழல் நிலவுவதால் சுற்றுலாப்பயணத்திற்கு எந்த தடையுமில்லை.

கோடைகாலம்

மிசோரம் மாநில முழுதுமே மிதமான கோடைக்காலத்தை பெற்றுள்ளது. இங்கு வெப்பநிலை தாங்கமுடியாத அளவுக்கு எப்போதும் உயர்வதில்லை. மார்ச் மாதம் முதல் ஜுன் வரை நிலவும் கோடைக்காலத்தில் 20°C  -  29°C  அளவிலான வெப்பநிலை காணப்படுகிறது. இப்பருவம் அய்சால் நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களை பார்த்து ரசிப்பதற்கு ஏற்றதாக உள்ளது.

மழைக்காலம்

மே மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை அய்சால் பகுதியில் மழைக்காலம் நீடிக்கிறது. மழைக்காலத்தில் கடுமையான மழைப்பொழிவு இப்பகுதியில் காணப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தில் 254 செ.மீ மழையை இப்பகுதி பெறுகிறது. சாலைகள் பாதிக்கப்படும் என்பதால் மழைக்காலத்தில் இந்நகரத்திற்கு சுற்றுலா மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

அய்சால் பகுதியில் குளிர்காலம் மிக மிதமானதாக காணப்படுகிறது. இது நவம்பர் மாத இறுதியில் தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கிறது. இக்காலத்தில் வெப்பநிலை 7°C  க்கு கீழே குறைவதில்லை.  மேலும், அதிகபட்சமாக 21°C  வரை இக்காலத்தில் நிலவுகிறது.  குளிர்காலம் முழுதுமே இப்பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்களை சுற்றிப்பார்க்க உகந்ததாக உள்ளது.