ஆர்க்கியாலஜிகல் மியூசியம் என்றழைக்கப்படும் இந்த தொல்லியல் துறை அருங்காட்சியகம்1949ம் ஆண்டு துவங்கப்பட்டதாகும். இது அஜ்மீரில் தில் – இ- ஆராம் தோட்டம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.
மூன்று பிரிவுகளைக்கொண்ட இந்த அருங்காட்சியகத்தில் பல அரிய பிரதிகள் மற்றும் பண்டைய நாகரிகங்களைச்சேர்ந்த தொல்லியல் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பர்னாலாவிலிருந்து கண்டெடுக்கப்பட்ட குறிப்புகளுடன் கூடிய ‘யுபா தூண்கள்’ (தியாகத்தூண்கள்) மற்றும் 8ம் நூற்றாண்டைச்சேர்ந்த பிரதிஹரா சிற்பங்கள் போன்றவற்றுடன் வரலாற்றுகால துவக்கத்துக்குரிய சில சுடுமண்பாண்ட பொருட்கள் ஆகியவையும் இங்கு உள்ளன.
ரைர், பைரட், சம்பார், நஹார் மற்றும் இதர அகழ்வாராய்ச்சி ஸ்தலங்களிலிருந்து எடுக்கப்பட்ட அரும்பொருட்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த மியூசியம் காலை 10 மணி முதல் மாலை 4.45வரை திறந்துள்ளது. நுழைவுக்கட்டணமாக இந்திய பயணிகளுக்கு 3ரூபாயும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.