தாராகர் கோட்டை வளாகத்தின் உள்ளே அமைந்திருக்கும் இந்த ராணி மஹால் அஜ்மீர் மன்னர்களால் தங்கள் ராணிமார்கள், ஆசைநாயகிகள், மற்றும் ஆசைநாயகர்கள் போன்றோர் வசிப்பதற்காக கட்டப்பட்டிருக்கிறது.
இதன் மைய மண்டபம் தேய்ந்துபோன சுவரோவியங்கள் மற்றும் உடைந்து போன வண்ணக்கண்ணாடி ஜன்னல்கள் போன்ற ராஜஸ்தானிய அலங்காரக் கலை அம்சங்களைக் கொண்டுள்ளது.
சுற்றிலுமுள்ள ஆரவல்லி மலைத்தொடரின் அழகு மற்றும் கோட்டையை சூழ்ந்துள்ள எழில்பள்ளத்தாக்கு ஆகியவற்றை இந்த ராணி மஹால் மாளிகையிலிருந்து நன்றாக பார்த்து ரசிக்க முடிகிறது.