ஷாஜஹான் மசூதி எனப்படும் இந்த மசூதி முழுதும் வெண் பளிங்குக்கல்லினால் கட்டப்பட்டுள்ளது. இது தர்க்கா ஷரீஃப் வளாகத்தின் உள் முற்றத்தில் அமைந்துள்ளது. 30.5 மீ நீளத்துடன் தாழ்வான கூரையைக்கொண்ட பாதைக்கூடம் மற்றும் நுணுக்கமான பின்னல் வேலைப்பாடுகளுடன் கூடிய கருவறை ஆகியவற்றை இந்த மசூதியில் பார்க்கலாம். முழுக்கவும் முகலாய பாணியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மசூதியில் 11 விதான வளைவுகளும் காணப்படுகின்றன.
41மீட்டர் உயரம் கொண்ட இந்த மசூதி மிக அற்புதமான கலையம்ச நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டு உச்சியில் அழகிய பளிங்கு குமிழ் கோபுரத்துடன் காட்சியளிக்கிறது. தாஜ் மஹால் கட்டுவதற்கு பளிங்குக்கல் வெட்டப்பட்ட அதே சுரங்கத்திலேயே இந்த மசூதிக்கும் கல் எடுக்கப்பட்டதாக மக்கள் நம்புகின்றனர். பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் இந்த மசூதி முகலாயப்பேரரசர் ஷாஜஹான் அவர்களால் கட்டப்பட்டுள்ளது.