Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஜ்மீர் » வானிலை

அஜ்மீர் வானிலை

அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான இடைப்பட்ட காலம் அஜ்மீர் நகரத்துக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள உகந்த பருவமாக கருதப்படுகிறது. இக்காலத்தில் பருவநிலை குளுமையுடனும் ஈரப்பதம் இல்லாமலும் காணப்படுகிறது. மேலும், மழைக்காலத்தில் நகரம் பொலிவுடன் காட்சியளிப்பதால் மழைக்காலத்திலும் இங்கு பயணம் மேற்கொள்ளலாம். கடும் வெப்பம் தகிக்கும் கோடைக்காலத்தில் அஜ்மீருக்கு பயணம் செய்வது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும்.  

கோடைகாலம்

அஜ்மீர் பகுதி ராஜஸ்தானின் எல்லா பகுதிகளையும் போலவே மிக வெப்பமான  கோடைக்காலத்தை பெறுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக  40° C  ஆகவும், குறைந்தபட்சமாக  28° C ஆகவும் காணப்படுகிறது. கோடைக்காலத்தில் இப்பகுதிக்கு பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை நிலவும் மழைக்காலத்தில் சுமார் 55 செ.மீ மழையை அஜ்மீர் பகுதி பெறுகிறது. இக்காலத்தில் பெரும்பாலும் புயல் இடியுடன் கூடிய மழைப்பொழிவு காணப்படுகிறது.

குளிர்காலம்

அஜ்மீர் பகுதியானது நவம்பர் முதல் பிப்ரவரி வரை நிலவும் குளிர்காலத்தில் மிக இனிமையாக  காணப்படுகிறது. இக்காலத்தில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 15° C யிலிருந்து 18° C வரை நிலவுகிறது. குளிர்காலமே அஜ்மீர் நகருக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள உகந்த பருவமாக கருதப்படுகிறது.