தமிழின் வயது எவ்வளவு தெரியுமா? இதை படிங்க
தேடு
 
தேடு
 

அல்மோரா - பேரானந்தம் தரும் சுற்றுலா அனுபவம்!

உத்தரகண்டின் குமாவோன் பகுதியில் ஒரு குதிரை சேணம் போன்ற வடிவிலான மலைமுகட்டில் அமைந்துள்ள மலைவாழ்விடமான அல்மோரா புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. சுயல் மற்றும் கோசி நதிகளுக்கு இடையே 5 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இடம் அல்மோரா. கடல் மட்டத்திலிருந்து 1651 மீட்டர் மேலே  அமைந்துள்ள மலை நகரமான அல்மோரா பசுமையான காடுகள் சூழ அழகுற நம்மை வரவேற்கின்றது. 15 மற்றும் 16-ஆவது நூற்றாண்டுகளில் இவ்விடத்தை சந்த் மற்றும் கத்யுர் வம்சம் ஆட்சி செய்ததாக வரலாறு கூறுகின்றது.

அல்மோரா புகைப்படங்கள் - பின்சர்
Image source: commons.wikimedia
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க

அல்மோரா மலையிலிருந்து அழகு கொஞ்சும் பனிமூடிய இமயமலையின் முழு அழகையும் பார்த்து ரசிக்கலாம். உலகம் முழுவதிலிருந்தும் பல சுற்றுலாப் பயணிகளை ஒவ்வொரு ஆண்டும் இங்கு வரும்படி செய்கின்ற அழகு அல்மோராவிற்கு உண்டு.

கசார் தேவி கோவில், நந்தா தேவி கோவில், சித்தை கோவில், மற்றும் கதர்மல் சூரியக் கோவில் ஆகியவை இங்கு அமைந்துள்ள பிரபலமான கோயில்களாகும்.

நந்தா தேவி கோவில் குமாவோன் கட்டிடக்கலையை எடுத்துரைக்கும் பழமையான கோயில். இக்கோவில் சந்த் வம்சத்தின் பெண் கடவுளுக்காகக் கட்டப்பட்டு பகதர்கள் பலர் வணங்கும் இடமாக புகழடைந்து வருகின்றது.

மற்றொரு புகழ் பெற்ற ஸ்தலமான கசார் தேவி கோவில் அல்மோராவிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 2-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும் இகோவிலில் சுவாமி விவேகானந்தர் தவம் மேற்கொண்டதாக நம்பப்படுகின்றது.

இங்கு சுற்றுலா வருபவர்களுக்கு, அழகிய காட்சியான சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் துள்ளியமாக காண வசதி செய்யப்பட்டிருக்கின்றது. சிம்தோலா  மற்றும் மர்தோலா சுற்றுலா வருபவர்களுக்கு ஏற்றது.

அல்மோராவிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அழகுற காட்சியளிக்கும் மான் பூங்கா பார்வையாளர்கள் மத்தியில் பிரபலம். இப்பூங்காவில் மான், சிறுத்தை, மற்றும் இமாலய கருப்புக் கரடிகள் மற்றும் இது போன்ற பல விலங்குகள் உள்ளன. 

கோபிந்த் பல்லப்பந்த் பொது அருங்காட்சியகம் மற்றும் பின்சார் வனவிலங்கு சரணாலயமும் இங்கு பார்க்க வேண்டிய இடங்கள். மலை ஏறுதல் மற்றும் பைக் சவாரி ஆகிய சாகசங்களில் ஈடுபடுவது புதுவித அனுபவத்தை பயணிகளுக்கு அளிக்கும்.

விமானம், சாலை, ரயில் போன்ற அனைத்து வித போக்குவரத்து மூலமாகவும் இவ்விடத்தை அடையலாம். பந்த் நகர் விமான நிலையம் மற்றும் கத்கோடம் ரயில் நிலையம் அல்மோராவிலிருந்து மிக அருகில் உள்ளது.

அல்மோராவின் அழகை முழுமையாக ரசிக்க ஏதுவான பருவம் கோடைக்காலமே. கோடைக்காலத்தில் அல்மோராவின் காலநிலை சாதமாகவும் ரசிக்கும்படியும் இருக்கும்.

Please Wait while comments are loading...