மலையேறுதல் அல்மோரா செல்லும் சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலம். இங்கு 5 கிமீ நீள அல்மோரா மலைப்பகுதிகளின் மயக்கும் காட்சிகளை அனுபவிக்கலாம். இங்கு பிரபலமான மலையேறுதல் அல்மோராவிலிருந்து ஜகேஸ்வர் வரை செல்லுதலாகும்.
பயணம் செய்யும் வழிகளில் பச்சைப்பசேல் இடங்களையும் அழகான குமாவோனி கிராமங்களின் அழகையும் பார்க்க முடியும். பசுமை மாறா பெரிய இலைகளையுடைய மரங்களையும், தேவதாரு மரங்கள், ஜகேஷ்வர் கோவில் வளாகத்தையும், மற்றும் வ்ரித் ஜகேஷ்வர் இங்கு மலையேற்றங்களில் காணப்படும் முக்கிய இடங்கள்.
இவ்வழியாக கசார் தேவி கோயிலுக்கும் பயணிகள் சென்று வரலாம். மலையேறுதலுக்கான சிறந்த நேரம் அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை ஆகும்.
பிந்தரி மலையேற்ற சாகச பிரியர்களுக்கு மற்றொரு பிரபலமான பாதை. இந்த வழியில் செல்லும் போது பச்சைப்பசேல் பைன் காடுகள் மற்றும் பள்ளத்தாக்குகளை பார்க்கலாம். நந்தா தேவி மலை மற்றும் நந்தாகோட் மத்தியில் அமைந்துள்ள பிந்தரி பனியாறு மலையேறுபவர்களுக்கு கிடைத்த பாக்கியம்.