Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அல்வர் » வானிலை

அல்வர் வானிலை

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவம் குளுமையுடனும் மற்றும் இனிமையான சூழலுடனும் காணப்படுவதால் அல்வர் பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ள இது மிகவும் ஏற்ற பகுவமாகும். மிதமான பருவநிலையுடன் பசுமையான சூழலுடன் காட்சியளிக்கும் மழைக்காலத்திலும் அல்வர் நகரத்துக்கு விஜயம் செய்யலாம்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை): ஏப்ரல் மாதத்தில் துவங்கி ஜூன் மாதம் வரை அல்வர் பிரதேசம் கோடைக்காலத்தை பெறுகிறது. கோடைக்காலத்தில் 28° C முதல் 41° C வரை இங்கு வெப்பநிலை நிலவுகிறது.

மழைக்காலம்

(ஜுலை முதல் செப்டம்பர் வரை): அல்வர் பகுதியில் மழைக்காலமானது ஜுலையில் துவங்கி செப்டம்பர் வரை நீடிக்கிறது. தொடர்ச்சியற்ற மிதமான மழைப்பொழிவை இக்காலத்தில் அல்வர் நகரம் பெறுகிறது. பொதுவாக குளுமை மற்றும் ஈரப்பதம் நிறைந்த சூழல் இக்காலத்தில் நிலவுகிறது. மழைக்குப்பிறகு அல்வர் நகரம் அழகுடன் காட்சியளிப்பதும் குறிப்பிடத்தக்கது.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை): அல்வர் பகுதி நவம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலத்தைப் பெறுகிறது. இக்காலத்தில் அதிகபட்சம் 23° C யிலிருந்து, குறைந்தபட்சம் 5° C வரை உள்ளது. குளுமையும் இனிமையும் நிறைந்துள்ளதால் குளிர்காலம் அல்வர் நகரத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாகவும் திகழ்கிறது.