Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அமர்நாத் » வானிலை

அமர்நாத் வானிலை

மே முதல் அக்டோபர் வரையிலான காலகட்டமே, அமர்நாத் செல்வதற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. இங்கு, கோடைகள் இதமானவையாகவும், குளிர்காலங்கள் மிகவும் குளிரானவையாகவும் உள்ளன. மே முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் தான், அதிக அளவிலான யாத்ரீகர்கள், அமர்நாத் யாத்திரையில் கலந்து கொள்கின்றனர். இந்தப் பகுதியில், நவம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு, இடைப்பட்ட காலத்தில், கடும் பனிப்பொழிவு இருப்பதினால், அப்போது, இங்கு கடுங்குளிர் நிலவும். பயணிகள், பொதுவாக இந்த சமயத்தில், அமர்நாத் செல்வதைத் தவிர்க்கின்றனர்.                                                                    

கோடைகாலம்

(மே முதல் அக்டோபர் வரை): கோடைகளில், அமர்நாத்தின் வானிலை மிகவும் ரம்மியமாக இருக்கும். வருடத்தின் இப்பகுதியில், இங்கு சராசரி தட்பவெப்பநிலை, சுமார் 15 டிகிரி செல்சியஸ் ஆகவே இருக்கும். அதனால், யாத்ரீகர்களின் வரத்து அதிகமாக இருக்கும்.

மழைக்காலம்

(வருடத்தின் எந்த சமயத்திலும்): அமர்நாத் பகுதியில், பருவ மழைகளின் வரவு கணிக்க இயலாத ஒன்றாக உள்ளது. இப்பகுதியில், மழை, வருடத்தின் எந்த சமயத்தில் வேண்டுமானாலும் வரலாம். மழை பெய்யும் சமயங்களில், பயணிகள் வளைவான பாதைகளில் ஏறும் போது, வழுக்கும் சாலைகள், அதை மிகவும் கடினமாக்குகின்றன. மழைக்காலத்தின் போது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மிகவும் கவனமாக இருத்தல் அவசியம்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் ஏப்ரல் வரை): அமர்நாத், கடுங்குளிருடன் கூடிய குளிர்காலங்களைக் கொண்டுள்ளது. இக்காலத்தில், வெப்பநிலைகள் -5 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகக் காணப்படுகின்றன. வெவ்வேறு பகுதிகளிலிருந்தும், இதன் அழகிய பனிப்பொழிவைக் காண, சுற்றுலாப் பயணிகள் அலைமோதுகின்றனர்.