Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அம்பாஜி » வானிலை

அம்பாஜி வானிலை

அம்பாஜியில் ஆண்டு முழுவதும்  இதமான வானிலையே நிலவுகிறது. 

கோடைகாலம்

இங்கு மார்ச் மாதத்தில் தொடங்கும்  கோடை காலம்  ஜூன் வரை நீடிக்கிறது. கோடைகாலத்தில் பகல் நேர அதிக பட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்ஸியஸ் வரை செல்லக் கூடும். மேலும் இரவுப் பொழுதும் வெப்பமாகக் காணப்படும். ஆகவே சுற்றுலா பயணிகள் இந்தப் பருவத்தில் இங்கு சுற்றுலா செல்வதை தவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மழைக்காலம்

ஜூலை முதல் செப்டம்பர் வரை அம்பாஜியில் மழைக்காலம் நீடிக்கிறது. அப்பொழுது வானம் கருத்து மேகமூட்டத்துடன் ஈரப்பதம் மிகுந்து காணப்படும். அம்பாஜி மழைக்காலத்தில் மிதமான மழையைப் பெறுகிறது. சில சமயங்களில் பனி அழகை இந்தப் பருவத்தில் நாம் தரிசிக்கலாம்.

குளிர்காலம்

அம்பாஜியின் மிகச் சிறந்த பருவம் குளிர்காலமே. குளிர்காலத்தில் நிலவும் அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியஸ் ஆகும். மேலும் குறைந்த பட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்யியஸாக பதிவாகும். சில சமயங்களில் பயணிகள் இங்கு மூடுபனியை அனுபவிக்கலாம்.