Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அம்பாலா » வானிலை

அம்பாலா வானிலை

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களே அம்பாலாவிற்கு சுற்றுலா செல்வதற்கு உரிய உகந்த பருவம் ஆகும். ஏனெனில் இந்த மாதங்களில் தான் பருவமழை முடிந்த பின்னர் ஒரு இனிமையான வானிலை நிலவுகிறது. 

கோடைகாலம்

அம்பாலா நகரின் கோடை காலமானது மிக கடுமையானது. இந்தக் காலத்தில் அம்பாலாவின் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 45 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கிறது. கோடைகாலத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியஸை ஒட்டியே காணப்படும். மே மாதத்தில் அம்பாலா மிக  வெப்பமாகக் காணப்படும். எனவே இந்த மாதத்தில் அம்பாலாவிற்கு சுற்றுலா வருவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

மழைக்காலம்

அம்பாலா பகுதியில் பருவமழை ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தொடர்கிறது. இந்த பருவத்தில் கனமழையின் காரணமாக அம்பாலாவின் வானிலை ஈரப்பதம் மிகுந்து காணப்படும்.

குளிர்காலம்

அம்பாலாவின்  குளிர்காலம் டிசம்பர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கிறது. இந்தப் பருவத்தில் அம்பாலாவின் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை முறையே 7 மற்றும் 4 டிகிரி செல்ஸியஸ் ஆகும்.