மந்திர் மாதா லால் தேவி எனும் இந்த வழிபாட்டுத்தலம் அம்ரித்ஸர் நகரில் ராணி கா பாக் எனும் பூங்கா வளாகத்தின் அங்கமாக அமைந்துள்ளது. இது 20 ம் நூற்றாண்டில் பிரபல்யமாக வாழ்ந்த பெண் யோகி ஒருவரின் பெயரில் அமைக்கப்பட்டிருக்கிறது.
பக்தர்கள் இவரை பூஜ்ய மாதாஜி என்று குறிப்பிட்டு வந்தனர். தற்போது அம்ரித்ஸர் நகரத்தின் முக்கியமான ஹிந்து வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக பிரசித்தமாக விளங்கும் இந்த கோயில் கத்ராவிலுள்ள புகழ் பெற்ற மாதா வைஷ்ணோ தேவி கோயிலைப்போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. வெகு தூரங்களிலிருந்தும் பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்கள் இந்த கோயிலை தரிசிக்க வருகை தருகின்றனர்.
இந்த கோயிலின் நுழைவாயில் பகுதியில் கணுக்கால் அளவுக்கு நீர் நிரம்பிய கால்வாய் அமைப்புகள், சுரங்கப்பாதை வாசல்கள், கண்ணாடி பதிக்கப்பட்ட கூடங்கள் மற்றும் நெளிவு நெளிவான நடைபாதைகள் போன்றவை அமைந்திருக்கின்றன.
கோயிலின் உள்ளே பக்தர்கள் பல்வேறு ஹிந்து தெய்வங்களின் சிலைகளை காணலாம். சிவன், பிரம்மா, காளி மற்றும் சரஸ்வதி ஆகிய தெய்வங்கள் இங்கு வீற்றிருக்கின்றன.
வேறு பல சிறு சன்னதிகளையும் கொண்டுள்ள இந்த கோயிலில் வேண்டிக்கொண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதாக நம்பிக்கை நிலவுகிறது. மதர் இந்தியா கோயில் என்றும் அழைக்கப்படும் இந்த கோயில் சுற்றுலாப்பயணிகளால் விரும்பி ரசிக்கப்படுகிறது.