Search
  • Follow NativePlanet
Share

அனந்த்நாக் - நீரூற்றுகளும், ஏரிகளும் நிரம்பிய பள்ளத்தாக்கு!

21

அனந்த்நாக் மாநகராட்சி, ஜம்மு & காஷ்மீரின் வணிக தலைநகரமாக அறியப்படுகிறது. இது காஷ்மீர் பள்ளத்தாக்கின் தென் மேற்கு வட்டாரத்தில் அமைந்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் வளர்ச்சி அடைந்த பகுதிகளில் ஒன்றான அனந்த்நாக் கி.மு. 5000-லேயே வணிக நகரம் என்றளவில் பிரபலமாக விளங்கியது. மேலும் இந்த இடம் அக்காலத்தில் நகர வளர்ச்சி அடைவதில் முன்னோடியாக அமைந்தது. இந்த நகரத்தை சுற்றி ஸ்ரீநகர், கார்கில், டோடா மற்றும் கிஷ்டவர் போன்ற நகரங்கள் உள்ளன.

புராணக்கதைகளின் படி, சிவபெருமான் அமர்நாத் குகைக்கு செல்லும் வழியில் தன் உடமைகளை இந்த நகரத்தில் விட்டுச் சென்றதால் இந்த நகரம் இப்பெயர் பெற காரணமாக விளங்கியது. அவர் தன்னிடம் உள்ள பல நாகங்களை இங்கே விட்டுச் சென்றதால் இந்த இடம் அனந்த்நாக் என்ற பெயரைப் பெற்றது.

கூல் குலாப் கர், டோடா மற்றும் புதல் தாலுக்காகளுடன் இணைப்பில் இருக்கிறது அனந்த்நாக்.  இந்த தலம் இங்குள்ள பல ஹிந்து மற்றும் முஸ்லிம் கோவில்களால் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த வண்ணம் உள்ளது.

ஹஸ்ரத் பாபா ரேஷி, கோஸ்வாமி குண்ட் ஆசிரமம், ஷீலாக்ரம் கோவில் மற்றும் நிலா நாக் போன்றவைகள் தான் இங்குள்ள புகழ் பெற்ற கோவில்களாகும்.

இங்குள்ள ஏழு கோவில் வளாகத்தில் ஹனுமான் கோவில், சிவன் கோவில், சீதா கோவில் மற்றும் கணேஷ் கோவில் ஆகியவைகள் உள்ளன. கோவில்களைத் தவிர சலங் நாக், மாலிக் நாக் மற்றும் நாக் பல் போன்ற அழகிய ஓடைகளை சுற்றுலாப் பயணிகள் இங்கு கண்டு களிக்கலாம்.

அனந்த்நாக் செல்லும் சுற்றுலாப் பயணிகள், 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மர்டந்த் சூரியக் கோவிலுக்கும் சென்று வரலாம். இந்த கோவிலை சூரிய பகவானுக்கு மரியாதை செய்யும் விதமாக லலித்தாதித்ய அரசரால் கட்டப்பட்டது.

இந்த கோவிலின் கட்டிடக்கலை காஷ்மீர் ஹிந்துக்களின் தொழில் நுட்பச் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்கும். இப்போது இந்த சூரிய கோவில் சிதைந்த நிலையில் இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் பனி படர்ந்த மலையின் பின்னணியில் எஞ்சியிருக்கும் இந்த கோவிலின் மிச்சத்தை கண்டு களிக்கலாம்.

இது போக 15-ஆம் நூற்றாண்டில் ஷேக் செயின்-உட்-டின் என்பவருக்காக கட்டப்பட்ட ஆயிஷ்முகம் மசூதியையும் காணலாம். ஷேக் செயின்-உட்-டின் என்பவர் தன் வாழ் நாள் முழுவதையும் அல்லாஹ்விற்காக அர்ப்பணித்ததாக நம்பப்படுகிறது.  அவர் அங்குள்ள ஒரு குகையை விட்டு வெளியே வராமல், உள்ளூர் மக்களுக்கு அல்லாஹ்வை பற்றி போத்தனைகள் செய்தார்.

நேரம் கிடைக்குமானால், மற்ற சமயஞ்சார்ந்த இடங்களான மஸ்ஜித் சையது ஷப், நக்பல், கெர்பவனி அஸ்தபன் மற்றும் ஆயிஷ்முகம் போன்ற ஸ்தலங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வரலாம்.

ஜான் பிஷப் நினைவகம் மருத்துவமனை திடலில், புனிதமாக கருதப்படும் ஒரு கிறித்துவ சிறுகோயில் உள்ளது. இந்த ஆலயம் 1982-ஆம் வருடம், தாங்கள் வழிபட தனிப்பட்ட திடல் வேண்டுமென்று போராடிய கிறிஸ்துவ மக்கள் மற்றும் அதிகாரிகளுக்காகவும் கட்டப்பட்டது. இந்த ஆலயம் அந்த பகுதியில் வாழும் கிறிஸ்துவ பணியாளர்களின் நலனுக்காக பாடுபடுகிறது.

அனந்த்நாக் செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகள் அங்கே சென்று வர அனைத்து முக்கிய வகை போக்குவரத்தையும் பயன்படுத்தலாம். ஸ்ரீநகரில் தான் இதற்கு மிக அருகாமையில் இருக்கும் விமான நிலையம் உள்ளது.

இது அனந்த்நாக்கிலிருந்து 62 கி.மீ. தொலைவில் உள்ளது. ஷேக் உல் அலம் விமான நிலையம் என்றழைக்கப்படும் இந்த விமான நிலையத்திலிருந்து புது டெல்லி மற்றும் ஜம்முவிற்கு விமான சேவைகள் உள்ளன.

வெளிநாட்டினர் இந்தியாவின் தலைநகரம் வழியாக ஸ்ரீநகருக்கு இணைப்பு விமானம் மூலம் வந்தடையலாம். வாடகை கார்களை பயன்படுத்தி ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து அனந்த்நாக் நகரத்துக்கு  சுலபமாக வரலாம்.

அனந்த்நாக் மாநகராட்சிக்கு ஜம்மு & காஷ்மீரிலிருந்து முக்கிய இடங்களுக்கு ரயில் சேவை இருப்பதால், அனந்த்நாக்கிற்கு ரயில் வழியாகவும் வந்தடையலாம்.  இந்தியாவிலுள்ள மற்ற பெரிய நகரங்களில் உள்ளவர்கள், அனந்த்நாக்கிலிருந்து 247 கி.மீ. தொலைவில் உள்ள ஜம்மு தவி ரயில் நலையம் மூலம் இங்கு வரலாம்.

தரை மார்க்கமாக அங்கு செல்ல தங்கள் சொந்த வாகனத்திலோ அல்லது வாடகை வாகனத்திலோ செல்லலாம். அரசு போக்குவரத்து கழகம் நடத்தும் பேருந்து சேவைகள் மூலமாகவும் இங்கு வரலாம். அனந்த்நாக் வருவதற்கு உகுந்த நேரம் இளவேனிற் காலம் மற்றும் கோடைக்காலத்திலும் தான்.

அனந்த்நாக் சிறப்பு

அனந்த்நாக் வானிலை

சிறந்த காலநிலை அனந்த்நாக்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது அனந்த்நாக்

  • சாலை வழியாக
    ஜம்மு மற்றும் ஸ்ரீநகரிலிருந்து ரோடு வழியாக நேரடியாகவே அனந்த்நாக் வந்தடையலாம். அனந்த்நாக்கிலிருந்து ஜம்மு 237 கி.மீ. தொலைவில் உள்ளது. தரை மார்க்கமாக இங்கு வர 4 மணி நேரமாகும். மேற்கூறிய ஊர்களிலிருந்து இங்கு வருவதற்கு பேருந்துகளும் வாடகை கார்களும் சுலபமாக கிடைக்கும். இது போக சொகுசு பேருந்துகள் மூலமாகவும் அனந்த்நாக் வரலாம். அதற்கு கட்டணம் கொஞ்சம் அதிகமாகும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    அனந்த்நாக் மாநகராட்சியில் ஒரு ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து இந்த மாநிலத்திலுள்ள முக்கியமான சில நகரங்களுக்கு ரயில் சேவைகள் உள்ளன. இருப்பினும் ஜம்மு தாவி ரயில் நிலையம் தான் பெரிய ரயில் நிலையம். இங்கிருந்து இந்திய நாட்டிலுள்ள பல முக்கிய நகரங்களான புது டெல்லி, மும்பை, சென்னை, சண்டிகர் மற்றும் திருவனந்தபுரத்திற்கு ரயில் சேவைகல் உள்ளன. ரயில் நிலையத்திலிருந்து ஆனந்த்னாத் வர வாடகை கார்களை பயன்படுத்தலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ஸ்ரீநகரில் உள்ள ஷேக் உல் அலம் விமான நிலையம் தான் அனந்த்நாக்கிற்கு மிக அருகாமையில் இருக்கும் விமான நிலையம். இது 62 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து புது டெல்லி மற்றும் ஜம்முவிற்கு விமான சேவைகள் உள்ளன. அதோடு டெல்லி விமான நிலையத்திலிருந்து ஸ்ரீநகருக்கு சீரான விமான போக்குவரத்து செய்யப்பட்டிருக்கிறது. விமான நிலையத்திலிருந்து ஆனந்த்னாத் வர வாடகை கார்களை பயன்படுத்தலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu