Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அதிரப்பள்ளி » வானிலை

அதிரப்பள்ளி வானிலை

வருடத்தின் எல்லா நாட்களிலும் அதிரப்பள்ளி சுற்றுலாத்தலத்துக்கு விஜயம் செய்யலாம் என்றாலும் வறட்சியான வெப்பமான கோடைக்காலத்தை தவிர்ப்பது நல்லது. மேலும் நீர்வீழ்ச்சிகளிலும் இக்காலத்தில் நீர்வரத்து இருக்காது. மழைக்காலமும், குளிர்காலமும் இந்த நீர்வீழ்ச்சி ஸ்தலத்துக்கு விஜயம் செய்ய உகந்தவையாக உள்ளன. மழைக்காலத்தில் நீர்வீழ்ச்சிகள் நிரம்பி வழியும் அழகு ரசிக்கக்கூடியது என்றாலும் சாலைப்பயணம் அபாயகரமானதாக இருக்க வாய்ப்புண்டு. எனவே மழைக்காலம் முடிந்து குளிர்கால துவக்கத்தில் இங்கு விஜயம் செய்வது எல்லா விதத்திலும் சிறந்தது.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் இப்பகுதி வெப்பமாகவும் சற்றே அசௌகரியமாகவும் உள்ளது. இங்கு மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் மே மாதம் வரை நீடிக்கிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 36° C வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 30° C வெப்பநிலையும் காணப்படுகிறது. ஒப்பீட்டளவில் அதிக வெப்பம் நிலவும் இக்காலத்தில் வறட்சியும் காணப்படுகிறது.

மழைக்காலம்

மழைக்காலமானது இப்பகுதியின் நீர்வீழ்ச்சிகளை உயிர்பெற வைத்துவிடுகிறது. அதிரப்பள்ளியின் மூன்று நீர்வீழ்ச்சிகளும் இக்காலத்தில் முழுவேகத்துடன் நிரம்பி வழிய ஆரம்பித்துவிடுகின்றன. ஜூன் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை இப்பகுதியில் மழைக்காலம் நீடிக்கின்றது. இருப்பினும் அக்டோபர் நவம்பர் மாதத்தில் கூட மழைப்பொழிவு காணப்படுகிறது.

குளிர்காலம்

அதிரப்பள்ளி சுற்றுலாத்தலத்தில் டிசம்பர் மாதம் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 33° C வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 20° C வெப்பநிலையும் காணப்படுகிறது. ஜனவரி மாதத்தில் இங்கு அதிகக்குளிர் நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.