Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாதாமி » வானிலை

பாதாமி வானிலை

பாதாமி நகரை சுற்றிப்பார்க்க ஏற்ற காலம் செப்டம்பரிலிருந்து பிப்ரவரி மாதம் வரை உள்ள இடைப்பட்ட காலமாகும். அச்சமயம் பருவநிலை இதமாகவும் சுற்றிப்பார்க்க ஏதுவாகவும் உள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களும் சிற்றுலா மேற்கொள்ள ஏற்றது. ஆனால் இம்மாதங்களில் கடின மழை பொழியவும் வாய்ப்புண்டு.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : பாதாமி பகுதியில் கோடைக்காலம் மிகுந்த உஷ்ணத்துடன் காணப்படுகிறது. இக்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 45℃ வரை உள்ளது. வெப்பம் அதிகமாக இருப்பதால் இக்காலத்தில் குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் பாதாமிக்கு பயணம் மேற்கொள்வது உகந்ததல்ல. 

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : பாதாமி மழைக்காலத்தில் நல்ல மழைப்பொழிவைப் பெறுகிறது. இக்காலத்தில் சூழல் மிகக்குளுமையுடனும் புறக்காட்சிகள் பசுமையுடனும் காணப்படுகிறது.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : குளிர்காலத்தில் பாதாமியின் சீதோஷ்ண நிலை மிகவும் விரும்பத்தக்கதாகவும் குளுமையுடனும் காணப்படுகிறது. இரவில் வெப்பநிலை 15℃ எனும் அளவிலும் பகலில் அதிகபட்சமாக 29℃ என்ற அளவிலும் உள்ளது.