Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பன்ஸ்வாரா » வானிலை

பன்ஸ்வாரா வானிலை

பருவநிலை குளுமையுடனும் மற்றும் இனிமையான சூழலுடனும் நிலவும் ஆகஸ்ட் முதல் மார்ச் வரையிலான பருவமே பன்ஸ்வாரா பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாகும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே மாதம் வரை): பன்ஸ்வாரா பிரதேசம் மிகக்கடுமையான வெப்பம் நிலவும் கோடைக்காலத்தை பெற்றுள்ளது. கோடைக்காலத்தில் 27° C முதல் 43° C வரை இங்கு வெப்பநிலை நிலவுகிறது. குறிப்பாக மே மாதத்தில் தாங்க முடியாத வெப்பம் இங்கு நிலவுவதால் பயணிகள் அச்சமயம் பன்ஸ்வாராவுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை): ராஜஸ்தான் மாநிலத்தின் மற்ற பகுதிகள் போல் அல்லாமல் மழைக்காலத்தில் பன்ஸ்வாரா பிரதேசம் நல்ல மழைப்பொழிவைப் பெறுகிறது. கோடையின் வெப்பத்திற்கு மாற்றாக இந்த மழைக்காலம் வருகை தருகிறது. ஜுலை மாதத்தில் மழைப்பொழிவு அதிகமாகவும் காணப்படுகிறது. பருவநிலை மிதமாகவும் இனிமையாகவும் நிலவுவதால் இக்காலத்தில் பன்ஸ்வாரா பகுதிக்கு விஜயம் செய்யலாம்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை): பன்ஸ்வாரா பகுதி குளிர்காலத்தில் குளுமையான மற்றும் சூழலைக் கொண்டுள்ளது. இக்காலத்தில் அதிகபட்சம் 26° C யிலிருந்து, குறைந்தபட்சம் 10° C வரை உள்ளது. எனவே குளிர்காலத்தில் இங்கு விஜயம் செய்வது மிகச்சிறந்தது. டிசம்பர் மற்றும் ஜனவரியில் குளிர் அதிகமாகவே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.