Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பேக்கல் » வானிலை

பேக்கல் வானிலை

பேக்கல் நகரின் இயற்கையழகு அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலங்களில் ரெட்டிப்பு அழகுடன் காட்சியளிப்பதால் இந்த காலங்களில் பேக்கல் நகரை சுற்றிப் பார்க்கும் அனுபவம் அற்புதமானது. அதோடு நீங்கள் மழையின் மலர் ஸ்பரிசத்தை விரும்புபவராக இருந்தால் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில் பேக்கல் நகருக்கு சுற்றுலா வருவதுதான் சிறந்த தேர்வாக இருக்கும். மேலும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் நிறைய பயணிகள் பேக்கல் நகருக்கு சுற்றுலா வருவதற்கு விரும்புகின்றனர்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : பேக்கல் நகரின் கோடை காலங்களில் வெப்பநிலை அதிகபட்சமாக 36 டிகிரி அளவில் பதிவாகும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : பேக்கல் நகரில் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் தென் மேற்கு பருவக்காற்றின் காரணமாக கடும் மழை கொட்டித் தீர்க்கும். அதோடு இந்த சமயங்களில் ஈரப்பதமும் 90 சதவிகிதம் அளவு இருக்கும். இதன் பிறகு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்கும்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : பேக்கல் நகரின் பனிக் காலங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரியாக பதிவாகும்.