Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பட்கல் » வானிலை

பட்கல் வானிலை

ஆகஸ்ட்டிலிருந்து மார்ச் வரை உள்ள காலமே பட்கலுக்கு விஜயம் செய்ய சிறந்த காலமாக உள்ளது. இக்காலத்தில் பட்கல் நகரம் அதிகமான சுற்றுலாப்பயணிகளை சந்திக்கிறது.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜுன் வரை): கோடைக்காலத்தில் பட்கல் மிகுந்த வெப்பத்துடன் காணப்படுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை 36° C வரை காணப்படுகிறது. இருப்பினும் இரவில் வெப்பநிலை மிகவும் குறைந்து 24° C என்ற அளவில் மட்டுமே காணப்படும். பொதுவாக கோடைக்காலத்தில் பயணிகள் பட்கலுக்கு விஜயம் செய்வதை தவிர்க்கின்றனர்.

மழைக்காலம்

(ஜூலை முதல் அக்டோபர் வரை) : பட்கல் பிரதேசம் மழைக்காலத்தில் மிதமான மழைப்பொழிவை மட்டுமே பெறுகிறது. இக்காலத்தில் சீதோஷ்ணநிலை மிக இதமாக காணப்படுவதால் பயணிகள் மழைக்காலத்தில் இங்கு வருகை தருவதை விரும்புகின்றனர்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் மார்ச் வரை) : பட்கல் நகரின் சீதோஷ்ணநிலை குளிர்காலத்தின்போது மிகவும் விரும்பத்தக்கதாக இனிமையான சூழலுடன் காணப்படுகிறது. இரவில் வெப்பநிலை 15° C வரை குறைந்தும் பகலில் அதிகபட்சமாக 22° C என்ற அளவிலும் காணப்படும். எனவே குளிர்காலம் பயணிகளை அதிக அளவில் பயணிகளை பட்கலுக்கு  ஈர்க்கின்றது.