போபாலில் உள்ள மீன் காட்சியகம், ராஜ் பவன் மற்றும் பழைய சட்ட சபைக்கு அருகில் உள்ளது. 1977-ல் திறக்கப் பட்ட இந்த மீன் காட்சியகத்தில் பல்வேறு வகையான இந்திய மற்றும் அயல் நாட்டு மீன் வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த மீன் காட்சியகம் இரண்டு அடுக்குகளை கொண்டுள்ளது; மேல் அடுக்கில் கோல்டன் ஷார்க், ரோசி பார்ப், கோல்டன் ப்ளாட்டா, கிங் ஸீப்ரா, ப்ளாக் மூர் மற்றும் டைகர் பார்ப் போன்ற மீன்களை கொண்ட 40 கண்ணாடி காட்சியகங்கள் உள்ளன.
கீழ் பகுதியில் இருக்கும் 26 பெரிய காட்சியகங்களில் பிற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட பலவகை மீன்களும் வைக்கப்பட்டுள்ளன; சில மீன்கள் ஏரிகளிலிருந்தும், மற்றும் சில குளங்கள் மற்றும் நதிகளில் இருந்தும் கொண்டு வரப்பட்டவையாக உள்ளன.
இவற்றில் ரோகு, கல்லெட், கட்லா, பாடின், சாவால், டிக்டோ, பாம் பிஷ், மிர்கால் மற்றும் பென்சில்-பிரா ஆகியவை குறிப்பிட்டு சொல்லத்தக்க மீன் வகைகளாகும். இந்த மீன் காட்சியகம் ஏப்ரல் முதல் செப்டம்பர் மற்றும் அக்டோபர் முதல் மார்ச் என இரண்டு பருவங்களிலும் திறந்திருக்கும்.