பிஜு பட்நாயக் பூங்கா புபனேஷ்வர் நகரில் உள்ள அழகுப்பூங்காக்களில் ஒன்றாகும். இது பெர்ஹாம்பூர் பகுதியில் யு.என் அலுவலகத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது.
ஆங்கிலேய அரசாங்கத்தின் DFID அலுவலகம் இந்த பூங்காவை ஒட்டியுள்ளது. முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் அவர்களை கௌரவிக்கும் விதமாக இந்த பூங்காவிற்கு பெயரிடப்பட்டிருக்கிறது.
பார்வையாளர்களை கவரும் வகையில் வண்ணமயமான தாவரங்கள் மற்றும் மலர்ச்செடிகளுடன் இந்த பூங்கா காட்சியளிக்கிறது. 7 ஏக்கர் நிலப்பரப்பில் ஒட்டுமொத்த பூங்காவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மிதக்கும் நீரூற்று மற்றும் இசை நீரூற்று போன்றவை இந்த பூங்காவின் விசேஷ அம்சங்களாகும். படகுச்சவாரி வசதிகளையும் இந்த பூங்கா கொண்டுள்ளது. பகல் இரவு பாராமல் இந்த பூங்காவிற்கு பார்வையாளர்கள் விஜயம் செய்தவண்ணம் உள்ளனர்.