ராயல் சதார்திஸ், நகரத்தினுள்ளே அமைந்திருந்தாலும், புஜ் நகரின் அமைதியான மையங்களுள் ஒன்றாக விளங்குகிறது. பரபரப்பான சாலைகளிலிருந்து தொலைவாகவும், சுற்றுப்புறத்தில் கட்டிடங்கள் ஏதும் இல்லாமலும் காணப்படும் இதில், ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று வெகு அழகாக இருப்பது போல் தோற்றமளிக்கும் அரச குடும்பத்தினரின் நினைவுச்சின்னங்கள் உள்ளன.
இவற்றுள் சில 2001 ஆம் வருடத்தில் புஜ் நகரைத் தாக்கிய நிலநடுக்கத்தினால் சிதைக்கப்பட்டிருந்தாலும் இரண்டாம் ராய்தன்ஜி, லக்பத்ஜி மற்றும் தேசர்ஜி ஆகியோரின் நினைவகங்கள் இப்போதும் நல்ல நிலையிலேயே காணப்படுகின்றன. இந்த இடம் கட்டாயம் வருகை தர வேண்டிய ஒரு இடமாகும்.