சாதுல் சிங் மியூசியம் - பிகானேர் நகரத்திலுள்ள லால்கர் அரண்மனையின் முதல் தளத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ சாதுல் மியூசியம் என்றும் அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் பழைய புகைப்படங்கள், வேட்டைச்சின்னங்கள், ஜார்ஜியன் ஓவியங்கள் மற்றும் அரிய கலைப்பொருட்களை காட்சிக்கு கொண்டுள்ளது.
பிக்கானேர் மன்னர்களான கங்கா சிங், சாதுல் சிங் மற்றும் கார்னி சிங் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஒரு கலைக்கூடமாக இது துவங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.பிக்கானேர் மன்னர்களின் வாழ்க்கைச்சரித்திரம் மற்றும் வீரசாகசங்கள் போன்றவற்றை கொண்ட தனிப்பிரிவுகள் இந்த மியூசியத்தில் உள்ளன. திங்கள் முதல் சனி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மியூசியம் திறந்துள்ளது.