தொழிலாளர் தலைவர் பி.டி.பர்மா நந்த திரிபாதி, என்பரால் 1967-ஆம் ஆண்டு இந்த ராம் மந்திர் பொகரோவில் நிறுவப்பட்டது. இந்த ராம் மந்திர் ஸ்ரீ ராம் மந்திர் அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்படுகின்றது.
இந்த அறக்கட்டளையானது ஆண்டு தோறும் ஏழைகளுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் திருமணத்தை நடத்தி வருகின்றது. இந்த கோவிலில் ராமர் மிக முக்கியமன தெய்வமாக இருந்த போதிலும், இந்தக் கோவில் வளாகத்தில் ராதா கிருஷ்ணா மந்திர், ஹனுமான் மந்திர், வெங்கடேஷ்வர் மந்திர், மந்திர், ஹனுமான் மந்திர், மற்றும் காளி மந்திர் போன்ற சிறிய கோயில்களும் உள்ளன.
இங்கு கோவில்களை தவிர்த்து ரிஷி நிவாஸ் மற்றும் ஒரு புனித நூலகம் ஒன்றும் உள்ளது. பொகரோவின் பழமையான சந்தை ராம் மந்திர் அருகிலேயே அமைந்துள்ளது. அங்கு சுவைமிகுந்த காபி, சமோசா, சாட் வகைகள் மற்றும் ரோல் போன்றவைகள் மலிவாகக் கிடைக்கின்றன.