Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போர்டி » வானிலை

போர்டி வானிலை

போர்டியின் கோடை காலம் எவ்வளவுக்கு எவ்வளவு வெப்பமயமானதோ, குளிர் காலமும் அவ்வளவுக்கு அவ்வளவு குளிர்ச்சி மிகுந்தது. எனினும் அக்டோபரிலிருந்து, மார்ச் வரையிலான காலங்கள் போர்டிக்கு சுற்றுலா வருவதற்கு உகந்த பருவங்களாகும்.

கோடைகாலம்

மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை போர்டி பகுதியில் கோடைக்காலம் நிலவுகிறது. இப்பருவத்தில் இங்கு அதிக உஷ்ணமும் ஈரப்பதமும் காணப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலையாக 450 C வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அரபிக்கடலின் அருகில் இருப்பதால் குளிர்ச்சியான கடல் காற்று இந்த அதிகபட்ச வெப்பத்தை ஓரளவு தணிக்கும் வகையில் உள்ளது. மே மாதத்தில் வெப்பம் மிகக்கடுமையாக இருக்கும் என்பதால் அச்சமயம் போர்டிக்கு பயணம் செய்வதை சுற்றுலாப்பயணிகள் தவிர்க்கின்றனர்.

மழைக்காலம்

ஜுலை மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை மிதமான மழைப்பொழிவை போர்டி பகுதி பெறுகிறது. மழைக்காலமானது அதற்கு முந்தைய வெயில் காலத்தின் கடுமையையும் வறட்சியையும் நிவர்த்தி செய்யும் விதத்தில் வருகை தருவதால் பெரிதும் வரவேற்கப்படுகிறது. மழைக்காலத்தில் போர்டியை சுற்றிப்பார்க்கும் அனுபவம் விரும்பத்தக்கதாகவே இருக்கும்.

குளிர்காலம்

டிசம்பர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை போர்டியில் குளிர்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் போர்டி ஸ்தலம் மிக இனிமையான் சீதோஷ்ணத்துடனும் ஆரோக்கியமான சுற்றுப்புறச் சூழலுடனும் காணப்படுகிறது. பகல் பொழுது குளுமையுடனும் இரவில் குறைந்த பட்சமாக வெப்பநிலை சுமார் 120 C என்ற அளவிலும் இருக்கும்.