நட்சத்திரக்கோட்டை என்றும் அறியப்படும் இந்த தாராகர் கோட்டை 1354ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. பூந்தியிலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ள இந்த கோட்டை ஒரு கூர்மையான மலைப்பகுதியில் சுற்றிலும் எழில் நிறைந்த இயற்கைக்காட்சிகள் சூழ அமைந்துள்ளது.
எப்போதுமே வற்றாத மூன்று குளங்களையும் இந்த கோட்டை வளாகம் உள்ளடக்கியுள்ளது. அக்காலத்திய கட்டுமான நுட்பங்களின் மேன்மைக்கு ஒரு ஆதாரமாக இந்த குளங்கள் திகழ்கின்றன.