Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பூந்தி » வானிலை

பூந்தி வானிலை

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான இடைப்பட்ட பருவம் பூந்தி நகருக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது.  இருப்பினும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை நிலவும் குளிர்காலத்திலும் இங்கு சிறு சுற்றுலாப்பயணமாக செல்லலாம். இக்காலத்தில் பூந்தி  பிரதேசம் குளுமையான மற்றும் இனிமையான சூழலுடன் காணப்படுகிறது.  

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): பூந்தி பிரதேசத்தில் மார்ச் முதல் மே வரை நிலவும்கோடைக்காலத்தில் வெப்பம் மிக அதிகமாகக் காணப்படுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை 35° C  முதல் 43° C  வரை நிலவுகிறது.  கடுமையான வெப்பம் நிலவும் கோடைக்காலத்தில் பயணிகள் பூந்தி நகருக்கு சுற்றுலா மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

(ஜுன் முதல் செப்டம்பர் வரை): பூந்தி பிரதேசம் மழைக்காலத்தில் சராசரியான மழைப்பொழிவையே பெறுகிறது. கோடையின் கடுமையை தணிக்க இந்த மழைக்காலம் பெரிதும் உதவுகிறது.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை): நவம்பர் முதல் பிப்ரவரி வரை பூந்தி பிரதேசத்தில் குளிர்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் பருவநிலை மிக இனிமையாகவும் குளுமையாகவும் காணப்படுகிறது. குளிர்காலத்தில் வெப்பநிலை 5° C  முதல் 30° C  வரை நிலவுகிறது.