தமிழின் வயது எவ்வளவு தெரியுமா? இதை படிங்க
தேடு
 
தேடு
 

பைந்தூர் - சூரியனும், சமுத்திரமும் சங்கமிக்கும் இடம்

பைந்தூர் கிராமம்  அதனுடைய சூரிய அஸ்த்தமனக் காட்சிக்காகவும், அழகிய கடற்கரைக்காகவும் உலகப் புகழ்பெற்றது. இந்த எழில் கொஞ்சும் கிராமம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தபுரா நகரில் அமைந்துள்ளது.

பைந்தூர் புகைப்படங்கள் - பைந்தூர் கடற்கரை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க

முன்னொரு காலத்தில்  பைந்தூர் அருகே உள்ள ஒட்டினன்னே என்ற சிறு குன்றில், பைந்து என்ற ரிஷி கடும் தவம் புரிந்ததாகவும், அதன் காரணமாகவே இதற்கு பைந்தூர் என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.இந்த ஒட்டினன்னே குன்றிலிருந்து பார்த்தால் சூரியன் கடலில் இறங்கும் அற்புதக் காட்சியை பயணிகள் காணலாம்.

இதே போல் கொல்லூர் மூகாம்பிகை கோயில், பெலக்கா தீர்த்த அருவி, மரவந்தே கடற்கரை மற்றும் மூன்று புறங்களும் கடலால் சூழப்பட்ட முருதேஸ்வர் கோயில் ஆகியவையும் பைந்தூர் அருகே அமைந்திருக்கக் கூடிய சுற்றுலாத் தலங்கள்.

பைந்தூரின் வெப்பநிலை எல்லா காலங்களிலும் இதமானதகவே இருக்கும். எனினும் ஆகஸ்ட்டிலிருந்து, மார்ச் வரையிலான காலங்களில் பைந்தூரை சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அலாதியானது.

இந்தக் கடற்கரை கிராமத்தை ரயில் மூலமாக அடைவது எளிது. அதேபோல் பெங்களூரிலிருந்து 480 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பைந்தூருக்கு, பெங்களூர் மற்றும் மைசூரிலிருந்து எண்ணற்ற தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

Please Wait while comments are loading...