பிரமிக்க வைக்கும் இந்த ஹெலிகல் ஸ்டெப்வெல் (சுருள் படிக்கிணறு) எனும் அமைப்பு பார்வையாளர்களை திகைக்க வைக்கும் தோற்றத்தை கொண்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட கிணறு அமைப்பின் சுவரை ஒட்டியவாறு சுருள் சுருளாக படிக்கட்டுகள் உள்ளே இறங்கிச்செல்வது போன்று வெகு துல்லியத்துடனும் நுணுக்கமாகவும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டமைப்பு செங்கற்களால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது என்பது மற்றொரு ஆச்சரியமூட்டும் தகவலாகும். 16ம் நூற்றாண்டில் இது உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.