Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சென்னை » வானிலை

சென்னை வானிலை

சென்னையை சுற்றிப்பார்த்து ரசிப்பதற்கு அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான பருவம் ஏற்றதாக உள்ளது. இம்மாதங்களில் சென்னையில் சுற்றுலாவுக்கேற்ற சாதகமான இதமான சூழல் நிலவுகிறது. இரவில் கடுமையானதாக  இல்லாமல் மிதமான குளிர் இக்காலத்தில் காணப்படும்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் மே வரை) : சென்னைப்பிரதேசம் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்திருப்பதால் உஷ்ணமும் ஈரப்பதமும் நிலவும் கோடைக்காலத்தை கொண்டிருக்கிறது. கோடைக்காலத்தில் அதிகபட்சமாக 45°C வரை வெப்பநிலை நிலவுகிறது. எனவே கோடைக்காலத்தில் சென்னை நகரை சுற்றிப்பார்ப்பது மிகுந்த அசௌகரியமாகவே இருக்கும்.

மழைக்காலம்

(ஜூன் பாதி  முதல் ஆகஸ்ட் வரை) : சென்னை பகுதியில் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை கடுமையான மழைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் வெப்பநிலை  தனிந்து  காணப்படுகிறது. கோடைக்காலத்தின் உஷ்ணத்தை இந்த தென்மேற்கு பருவக்காற்றுகளால் பெறப்படும் மழைக்காலம் பெருமளவில் தணித்துவிடுகிறது. அன்றாட வாழ்க்கை மற்றும் போக்குவரத்து பாதிக்கப்படும் என்றாலும் சென்னைவாசிகள் பலகாரணங்களுக்காக மழையின் வரவை ஆவலோடு எதிர்ப்பார்ப்பவர்களாகவே உள்ளனர்.

குளிர்காலம்

(நவம்பர் பாதி முதல் பிப்ரவரி பாதி வரை) : கடலுக்கு வெகு அருகில் சென்னை பிரதேசம் இதமான குளிர்காலத்தை பெறுகிறது. இருப்பினும் இது மிகக்குறுகிய காலத்திற்கே நிலவுகிறது. இங்கு நவம்பர் பாதியில் ஆரம்பிக்கும் குளிர்காலம் பிப்ரவரி பாதி வரைநீடிக்கிறது. இக்காலத்தில் குறைந்தபட்சமாக 19°C வரை வெப்பநிலை நிலவுகிறது.  பகலில் மிதமான வெப்பம் மற்றும் மாலை வேளைகளில் இதமான குளுமையை இக்காலத்தில் அனுபவிக்கலாம். காலை வேளைகளில் லேசான பனிமூட்டமும் காணப்படலாம்.