Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோப்தா » ஈர்க்கும் இடங்கள் » மத்யமஹேஷ்வர் கோயில்

மத்யமஹேஷ்வர் கோயில், சோப்தா

15

இந்துக்கடவுளான சிவனுக்காக எழுப்பப்பட்டுள்ள மத்யமஹேஷ்வர் கோயில், சோப்தாவின் மன்சுனா கிராமத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3497 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

கேதார்நாத், துங்கநாத், ருத்ரநாத், மத்யமஹேஷ்வர் மற்றும் கல்பேஷ்வர் ஆகியவை பஞ்ச் கேதார் என்று சிறப்பாக அழைக்கப்படுகின்றன. இவை இதே வரிசைமுறையிலேயே அமைந்துள்ளன. மத்யமஹேஷ்வர் கோயில், பஞ்ச் கேதார் யாத்திரையின் போது நான்காவதாக வருகின்றது.

இக்கோயிலில், பக்தர்கள், சிவனின் வயிற்றுப் பகுதியை வழிபடுவதாக ஐதீகம். ஒரு பிரபல நம்பிக்கையின் படி, இந்து காப்பியமான மஹாபாரதத்தில் வரும் பாத்திரங்களான பஞ்ச பாண்டவர்களால் இக்கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாண்டவர்கள், தங்கள் ஒன்று விட்ட சகோதரர்களான கௌரவர்களை குருக்ஷேத்திரப் போரில் கொன்றமைக்காக மனம் வருந்தி, சிவபெருமானிடம் பாவ மன்னிப்பு கோரியதாகவும், ஆனால் கோபமுற்ற சிவன், காளையான ‘நந்தி’ ரூபத்துக்கு மாறி, இமயமலையின் கர்வால் பகுதியில் மறைந்து கொண்டதாகவும், பாண்டவர்கள் நந்தியை குப்தகாக்ஷியில் கண்டபோது நிறுத்த முற்பட்டு தோற்றதாகவும், பின்னர் சிவபெருமானின் உடல் பகுதிகள் ஐந்து வெவ்வேறு இடங்களில் திரும்பத் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. சிவனின் வயிற்றுப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இடத்திலேயே, மத்யமேஷ்வர் கோயில் அமைந்துள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri

Near by City