Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோட்டாணிக்கரா » வானிலை

சோட்டாணிக்கரா வானிலை

வறட்சியும் ஈரப்பதமும் கலந்த இனிமையான பருவநிலையை கொண்டிருப்பதால் மழைக்காலம் தவிர்த்து வருடத்தின் எல்லா நாட்களிலும் சோட்டாணிக்கராவுக்கு பயணம் மேற்கொள்ளலாம். இருப்பினும் குளிர்காலம் சுற்றுலாவுக்கு மிக ஏற்றதாக உள்ளது. திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் அதிகமாக நடைபெறும் ஆகஸ்ட் – நவம்பர் மாதங்களில் இங்கு விஜயம் செய்வதும் மற்றொரு வகையில் விரும்பத்தக்கதாக உள்ளது.

கோடைகாலம்

சோட்டாணிக்கராவில் மார்ச் மாதம் தாக்கத் துவங்கும் கோடை வெப்பம் மே மாத கடைசி வரை நீடிக்கிறது. வறட்சியான சூழல் நிலவும் இக்காலத்தில் அதிகபட்சமாக 37° C வரை வெப்பநிலை காணப்படுகிறது. கோயில் ஸ்தலங்களை தரிசிக்க இது உகந்த பருவம் என்றாலும் மெலிய பருத்தி உடைகளுடன் பயணம் மேற்கொள்வது சிறந்தது.

மழைக்காலம்

மழைக்கால மேகங்கள் சோட்டாணிக்கராவுக்கு நல்ல மழைப்பொழிவை அளிக்கின்றன. இங்கு மழைப்பொழிவு ஜூன் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாத இறுதி வரை நீடிக்கின்றது. மிகக்கடுமையான மழைப்பொழிவை இப்பருவத்தில் எதிர்பார்க்கலாம். குறிப்பாக ஜுன் ஜுலை மாதங்களில் அதிக மழை பொழிவதால் அக்காலத்தில் ஊர் சுற்றிப்பார்ப்பதும் சிரமம்.

குளிர்காலம்

எல்லா தென்னிந்திய நகரங்களையும் போலவே சோட்டாணிக்கராவிலும் குளிர்காலமானது டிசம்பர் மாதத்திலிருந்து துவங்குகிறது. மிகக்குளுமையாக காணப்படும் இம்மாதத்தில் சோட்டாணிக்கராவுக்கு யாத்திரைச்சுற்றுலா மேற்கொள்வது சிறந்தது. ஊர்சுற்றிப்பார்க்கவும் கோயில்களை தரிசிக்கவும் இக்காலம் மிகவும் ஏற்றதாக உள்ளது.