உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

குகா அணைக்கட்டு, சூரசந்த்பூர்

கண்டிப்பாக பார்க்க வேண்டியவை

சூரசந்த்பூர் நகரத்தின் முக்கியமான உயிர்நாடிகளில் ஒன்றாக குகா அணைக்கட்டு உள்ளது. மின்சார உற்பத்தி மற்றும் தண்ணீர் அளிப்பு போன்ற காரணங்களுக்காக கட்டப்பட்டுள்ள குகா அணைக்கட்டு, ஒரு புகழ் பெற்ற சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. ஒரு ஏரியின் மேல் கட்டப்பட்டுள்ள குகா அணைக்கட்டு, உள்ளூர்வாசிகளிடம் மிகவும் புகழ் பெற்றுள்ள இன்ப சுற்றுலா தலமாகும்.

சூரசந்த்பூர் புகைப்படங்கள் - குகா அணைக்கட்டு
Image source:en.wikipedia.org
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க

1983-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணைக்கட்டு, அதன் பிறகு மிகவும் வேகமாக பழுதடைந்து வந்து கொண்டிருந்தது. எனினும், 2002-ம் ஆண்டு இது சீரமைக்கப் பட்டு பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப் படத் துவங்கியது. 2010-ம் ஆண்டு திரு.சோனியா காந்தி அவர்கள் மறுசீரமைக்கப்பட்ட இந்த அணைக்கட்டினை திறந்து வைத்தார்கள்.

2.5 பில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த அணைக்கட்டின் உயரம் 38 மீட்டர் மற்றும் அகலம் 230 மீட்டராக உள்ளது. மாடா கிராமத்திற்கு அருகில் இருக்கும் இந்த அணைக்கட்டினால், இந்த மாவட்டத்தின் பொருளாதாரமும் கணிசமான அளவில் முன்னேற்றமடைந்தது. இன்றும் கூட சூரசந்த்பூர் இந்த அணைக்கட்டு மீண்டும் புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டதற்கான நன்றியை தெரிவித்துக் கொண்டு வளர்ந்து வருகிறது.

Please Wait while comments are loading...