புரூக்பீல்ட்ஸ் மால் கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் ஆகும். இது கோயம்புத்தூரில் உள்ள மிகப் பெரிய வளாகங்களில் ஒன்றாகும். புரூக்பாண்ட் சாலையில் அமைந்துள்ள இது 2009ல் திறக்கப்பட்டது. நகரிலேயே அதிகம் பேர் வந்து செல்லும் வளாகமாக இது விளங்குகிறது.
இந்த வளாகம் புரூக்பீல்ட்ஸ் எஸ்டேட்ஸ் தனியார் நிறுவனத்தின் கற்பனைக் குழந்தையாகும். இந்த வளாகத்தை உருவாக்ககும் திட்டம் வகுத்ததோடு அவர்களே அதைக் கட்டவும் செய்தனர். பகுதிகளாக திறக்கப்பட்ட இந்த வளாகம் இப்போது முழுமையாக செயல்படுகிறது.
இந்த வளாகத்தின் புகழுக்குக் காரணம் பொருட்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகள் இரண்டிலும் இங்கு கிடைப்பதால் தான். வரம்பற்ற பொருட்கள் இங்கு விற்பனைக்கு கிடைக்கின்றன.
ஆறு திரைகள் கொண்ட மல்டிப்ளெக்ஸ் ஒன்றும், உள்ளூர் மற்றும் காண்டினெண்டல் உணவு வகைகளைப் பரிமாறும் உணவகம் ஒன்றும் இங்கு உள்ளன. குழந்தைகள் பெரியவர் ஒருசேர விளையாடும் விளையாட்டு மண்டலம் ஒன்றும் இங்குள்ளது.
பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், வைஃபை (WiFi)இணைப்பு மற்றும் ஏ.டி.எம் முதலான அடிப்படை வசதிகளும் இங்கு உள்ளன.