Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோயம்புத்தூர் » வானிலை

கோயம்புத்தூர் வானிலை

கோயம்புத்தூர் செல்ல சிறந்த சமயம் அக்டோபர் முதல் பிப்ரவரி வரையான காலம் தான். அப்போது  பருவநிலை இதமாகவும் அழகாகவும் இருக்கும். பகல் நேரத்தில் காற்றில் உள்ள குளிரினால்  சுற்றிப்பார்ப்பதும் பயணம் செய்வதும் சாத்தியமாகிறது. மாலை மேரங்களும் இனிமையானதாகக் காணப்படுகின்றன. கம்பளி உபயோகிக்கும் அளவுக்கு குளிர் இருப்பதில்லை. 

கோடைகாலம்

கோயம்புத்தூரின் தட்பவெப்பம் கோடை காலத்தில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வரை காணப்படுகிறது. மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் கோடைக் காலமாகும். மழைக்காலம் தள்ளிப்போகும் பட்சத்தில் ஜூன் மாத மத்தி வரை வெப்பம் தொடரும். இந்த மாதங்களில் மதிய நேரங்கள் மிக வெப்பமாக இருக்கும். அந்த சமயங்களில் வீட்டிற்குள்ளேயே இருப்பது நல்லது.

மழைக்காலம்

இந்நகரம் மிதமானது முதல் அதிகளவிலான மழையை ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் பெறுகிறது. தென் மேற்குப் பருவக்காற்றின் காரணமாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மழைத்தூறல் காணப்படும். மழைக்காலங்களில் சாலைப்போக்குவரத்து தடைபட்டு டிராபிக் ஜாம் ஆக வாய்ப்புகள் அதிகம் என்பதால் அப்போது கோயம்புத்தூர் செல்வதை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

கோயம்புத்தூர் குளிர் காலத்தில் மிக இனிமையானதாக இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரிக்கு குறைந்து செல்வதில்லை.  அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரியை தாண்டிச் செல்வதில்லை. மழைப்பொழிவு இருந்தால் குளிரின் அளவு சிறிது அதிகரிக்கலாம். குளிர்காலம் டிசம்பர் மாத முன்பகுதியில் துவங்கி பிப்ரவரி இறுதியில் முடிகிறது.