Search
  • Follow NativePlanet
Share

கூச் பிஹார் – மேற்கு வங்காளத்தில் ஒரு சமஸ்தான நகரம்!

11

மேற்கு வங்காள மாநிலத்தின் வடபகுதியில்  திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரமாக வீற்றிருக்கும் ‘கூச் பிஹார்’ பாரம்பரிய அழகுடன் காட்சியளிக்கிறது. வரலாற்றுக்காலத்தில் பீஹார் சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கிய இது தற்போது உலகப்பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக புகழ் பெற்றுள்ளது.

காலனிய ஆட்சிக்காலத்தை சேர்ந்த கம்பீரமான கட்டிடங்கள் மற்றும் இமயமலைத்தொடர்களின் அழகு ஆகியவை இந்நகரத்தின் சிறப்பம்சங்களாகும்.

கிழக்கு இமயமலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கூச் பிஹார் நகரத்தை சுற்றி வளமான அல்பைன் காடுகளும் நிரம்பியுள்ளதால் இயற்கை அழகு மிகுதியாக வாய்க்கப்பெற்ற பூமியாகவும் இது அறியப்படுகிறது.

பெங்காலி, பௌத்தம் மற்றும் திபெத்திய கலாச்சாரங்களின் கலவையாக விளங்கும் கூச் பிஹார் நகரம் இந்தியாவின் பன்முக கலாச்சார இயல்பை பிரதிபலிப்பது போல் அமைந்துள்ளது.  

முக்கிய சுற்றுலா அம்சங்கள்

கூச் பிஹார் நகரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் பயணிகள் விஜயம் செய்ய வேண்டிய சில முக்கிய சுற்றுலா அம்சங்கள் அமைந்துள்ளன. பானேஷ்வரா ஷிவா கோயில், பரதேபி பரி கோயில், கோஸானிமரி ராஜ்பாத் எனும் அகழ்வாராய்ச்சி ஸ்தலம் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள்

தோர்ஸா எனும் ஆற்றிற்கு அருகில் இந்த நகரம் அமைந்திருப்பதோடு, மழைக்காலத்தில் இங்கு கடுமையான மழைப்பொழிவும் நிலவுவதால் அவ்வப்போது போக்குவரத்து வசதிகள் துண்டிக்கப்படும் இயல்பை இந்நகரம்  கொண்டிருக்கிறது.

எனவே கூச் பிஹார் நகர மக்கள் உல்லாசத்தை விரும்பும் மனஇயல்பு கொண்டவர்களாக உள்ளனர். இவர்கள் பெங்காளி பண்டிகைகளான தீபாவளி, துர்க்கா பூஜா, காளி பூஜா மற்றும் துசேரா போன்ற பண்டிகைகளை கோலாகலமாக கொண்டாடுகின்றனர். வருடமுழுதும்  இந்நகரத்தில் திருவிழாக் கொண்டாட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. ராஸ் மேளா எனும் திருவிழா இவற்றில் குறிப்பிடத்தக்கது.

உணவுக்கலாச்சாரம்

பயணிகள் கூச் பிஹாருக்கு வரும் போது இங்கு கிடைக்கும் பல்வேறு உணவுப்பண்டங்களை ருசி பார்ப்பது அவசியம். புனா கிச்சிரி மற்றும் லப்ரா என்பவை பிரசித்தமான உள்ளூர் தின்பண்டங்களாகும்.

மோமோ எனப்படும் உருண்டைகளை விற்கும் நடைப்பாதைக்கடைகள் முதல் விரிவான பெங்காளி மற்றும் பங்களாதேஷ் உணவுவகைகளை பரிமாறும் உயர்தர உணவகங்கள் வரை இந்நகரத்தில் அதிகம் காணப்படுகின்றன. விசேஷமான கடல் உணவுத்தயாரிப்புகள் மற்றும் காடிகரம், ஜல்முரி போன்றவற்றை சுவை பார்க்கவும் பயணிகள் மறக்கக்கூடாது.

கூச் பிஹார் நகர குடிமக்கள் ஒரு ஒற்றுமையான சமுதாய அமைப்புடன் வசிக்கின்றனர். பரா என்றழைக்கப்படும் குடியிருப்புகளில் இவர்கள் வசிக்கின்றனர்.

இந்த குடியிருப்புகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான சமூக மன்றம், பொழுதுபோக்கு வளாகம் மற்றும் உணவகம் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு குடியிருப்புகள் மற்றும் இனத்தை சேர்ந்தவர்கள் அவ்வப்போது சந்தித்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவதும் வழக்கமாக உள்ளது.

பல்வேறு தொழில்நுட்ப கல்வி மையங்களையும் இந்நகரம் கொண்டிருப்பதால் ஒரு கல்விக்கேந்திரமாகவும் இது திகழ்கிறது. பெயர் பெற்ற பல பள்ளிகளும் இங்கு இயங்குகின்றன. எனவே அருகிலுள்ள நகரங்களிலிருந்து கல்வி கற்பதற்காக மாணவர்கள் இந்நகரத்திற்கு அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர்.

விளையாட்டு

எல்லா மேற்கு வங்காளப்பகுதிகளையும் போலவே இந்நகர மக்களும் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். எம்.ஜே.என் ஸ்டேடியம், கூச் பிஹார் ஸ்டேடியம் மற்றும் நேரு ஸ்டேடியம் போன்றவற்றுக்கு பயணிகள் விஜயம் செய்து ரசிக்கலாம்.

தொழில் நகர அடையாளம்

சுற்றுலாவுக்கேற்ற நகரமாக மட்டுமல்லாமல் கூச் பிஹார் ஒரு தொழில் நகரமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது. முக்கியமான தொழில் நிறுவனங்கள் இந்நகரத்தில் தங்களது கேந்திரங்களை நிறுவியுள்ளன. அதனால் வேலைவாய்ப்பு வசதிகளும் பெருகியுள்ளன.

எல்லாவகையான பயணிகளுக்கும் பிடித்த ஏதாவதொரு சிறப்பம்சத்தை கூச் பிஹார் நகரம் கொண்டுள்ளது. வியாபார நோக்கத்தில் விஜயம் செய்பவர்களுக்கும், குடும்பத்துடன் சுற்றுலா மேற்கொள்பவர்களுக்கும் ஏற்ற எல்லா அம்சங்களும் இங்கு உள்ளன.

வடக்கு வங்காள மாநிலத்தின் முக்கியமான நகரங்களிலிருந்து சுலபமாக இந்நகரத்துக்கு பயணம் மேற்கொள்ளலாம். அருகிலுள்ள முக்கியமான சிறு நகரங்களுக்கு விஜயம் செய்யவும் இந்நகரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இங்கிருந்து சிலிகுரி நகரம் சில மணி நேர பயண தூரத்தில் உள்ளது.

எப்போது விஜயம் செய்யலாம் கூச் பிஹார் நகரத்திற்கு?

குளிர்காலமே கூச் பிஹார் நகரத்திற்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் சுற்றுலாவுக்கேற்ற இதமான சூழல் நிலவுகிறது.

எப்படி சென்றடைவது?

நாட்டின் எல்லா பகுதிகளுடனும் போக்குவரத்து வசதிகளால் கூச் பிஹார் நகரம் இணைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா நகரத்தின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் இந்நகரத்திற்கு அருகிலுள்ள விமான நிலையமாகும். கவுஹாத்தி நகரத்திற்கான சாலை இணைப்புகளையும் இந்நகரம் கொண்டுள்ளது.

கூச் பிஹார் சிறப்பு

கூச் பிஹார் வானிலை

சிறந்த காலநிலை கூச் பிஹார்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கூச் பிஹார்

  • சாலை வழியாக
    NH31 மற்றும் NH31D ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் கூச் பிஹார் நகரத்தை சிலிகுரி மற்றும் மேற்கு வங்காள மாநிலத்தின் இதர பகுதிகளுடன் இணைக்கின்றன. சிலிகுரியிலிருந்து 141 கி.மீ தூரத்தில் கூச் பிஹார் அமைந்துள்ளது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஜல்பய்குரி மற்றும் சிலிகுரி ரயில் நிலையங்கள் கூச் பிஹார் நகரத்தை நாட்டின் அனைத்து பகுதிகளுடனும் ரயில் சேவைகளால் இணைக்கின்றன. கொண்டுள்ளது. டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு தினசரி ரயில் சேவைகள் இங்கிருந்து கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கூச் பிஹார் விமான நிலையம் சிலகாலமாக இயங்காமல் இருந்துவருகிறது. இருப்பினும், சிலிகுரி விமான நிலையம் இங்கிருந்து 153 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அங்கிருந்து சாலைப்போக்குவரத்து மூலம் இந்நகரத்திற்கு வரலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat