Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குற்றாலம் » வானிலை

குற்றாலம் வானிலை

மழை மற்றும் குளிர்காலங்கள் குற்றாலத்தை சுற்றிப்பார்ப்பதற்கு ஏற்ற காலங்கள். கண்கவர் நீர்வீழ்ச்சிகளும், இதமான வானிலையும் இப்பகுதியின் வனப்பை அதிகரித்து அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

கோடைகாலம்

குற்றாலத்தின் கோடைகாலம் மார்ச் முதல் மே வரை இருக்கிறது. வெப்ப நிலை 23 டிகிரி செல்ஸியஸில் இருந்து 37 டிகிரி செல்ஸியஸ் வரை இருப்பதால் ஆண்டின் இந்த நேரத்தில் வானிலையானது மிகவும் சூடாகவும் வறண்டும் காணப்படும். இப்பகுதியின் முக்கிய அம்சமான ஏறக்குறைய எல்லா நீர்வீழ்ச்சிகளும் வறண்டு காணப்படும். இப்பகுதியை சுற்றிப்பார்க்க இது ஏற்ற நேரம் அல்ல.

மழைக்காலம்

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை மாதங்கள் நல்ல மழையை பெறுகின்றன. அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து விழும் கண்கொள்ளா காட்சியை இந்த பருவத்தில் காணலாம். தொடர்ச்சியான சாரலும், லேசான காற்றும் இப்பகுதியின் வசீகரத்தை மேலும் அதிகரிக்கின்றன. குற்றாலத்தை சுற்றிப்பார்பதற்கு ஆண்டின் இது ஒரு சிறந்த பருவம்.

குளிர்காலம்

குளிர்காலம் அக்டோபர் முதல் பிப்ரவரி வரையில் காணப்படுகின்றது. மேலும்  மிதமாகவும் இதமாகவும் இருக்கும். வெப்ப நிலையானது 13 டிகிரி செல்ஸியஸ் முதல் 24 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கும். இந்நகரத்தை சுற்றிப்பார்பதற்கு இந்த பருவமும் ஏற்றது.