பாரகண்ட சிகரம் மற்றும் டென்ட் சிகரம் ஆகிய இரண்டுக்கும் இடையில் அமைந்துள்ள இடம் தான் சோபியா கணவாய். இந்த இரு சிகரங்களும் முறையே 5877மீ மற்றும் 6133மீ உயரங்களை கொண்டவை.
மேலும் இந்த கணவாய் அமைந்திருக்கும் பார்மர் கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 5000மீ உயரத்தில் உள்ளது. இந்த இடத்திலிருந்து வடக்கு மற்றும் தெற்காக அமைந்துள்ள சன்ஸ்கார் மற்றும் மணிமகேஷ் மலைப்பகுதிகளை நின்ற இடத்திலிருந்தவாறே ஒரே சுற்றுவட்டத்தில் பார்க்க இயலும்.
இந்த கணவாய், மலையேற்றத்தின் மூலமாக செங்குத்தாக இருக்கும் காங் லா கணவாயை அடைவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த வழியை மலையேற்றத்தில் நல்ல அனுபவமுள்ளவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.