பாம்புக் கடவுளான காஜ்ஜியை வழிபடுவதற்காக கட்டப்பட்டுள்ள காஜ்ஜி நாகா கோவில் ஹிமாச்சல பிரதேசத்தின் மிகப்பழமையான கோவில்களில் ஒன்றாக இருக்கிறது. மரத்தில் செதுக்கப்பட்ட இந்த கோவில் 12-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாகும்.
இந்த கோவிலின் மண்டபத்தில் மகாபாரதக்கதையில் வரும் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் படங்கள் அதன் கூரையிலிருந்த தொங்கும் வகையில் வைக்கப் பட்டிருப்பது சுற்றுலா பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்ப்பதாக இருக்கும்.