மத சம்மந்தமான பார்வையிடங்களுக்கும் மற்றும் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும் விளங்கக் கூடிய இடம் சிவ்குல் ஆகும். இது உலக மத தத்துவங்கள் மற்றும் சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்ட விமலா தாக்கூருக்கு சொந்தமான இடமாகும்.
டல்ஹெளசியின் மால் ரோட்டில், காந்தி சௌக் மற்றும் சுபாஷ் சௌக்கிற்கு இடையில் இந்த ஆசிரமம் அமைந்துள்ளது. பீர்-பாஞ்சல் குன்றுகளிடையே, அமைந்திருக்கும் இந்த அழகிய ஆசிரமம் சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. இந்த பீர்-பாஞ்சல் மலைகள் சம்பா மாவட்டத்துடனும் மற்றும் ஜம்மு காஷ்மீருடனும் இணைக்கும் பகுதியாக உள்ளன.
இந்த இடத்தின் மேலாளராக இருக்கும் விமலா தாக்கூர் கோடைகாலங்களிலும், வெகு தூரத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்காகவும் மதம் மற்றும் ஒழுக்கம் தொடர்பான விரிவுரைகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார்.