டல்ஹெளசியின் பக்ரோட்டா மலைகளிலிருந்து 2 கிமீ தொலைவிலேயே திபெத்திய கைவினைப்பொருள் மையம் அமைந்திருக்கிறது. திபெத்தின் கலை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தக் கூடிய கலைப்பொருட்களை வாங்குவதற்கு இந்த இடம் மிகவும் ஏற்றது.
இந்த மையத்தில் நகைகள், நினைவுப் பரிசுகள் மற்றும் சீனப் பொருட்களை வாங்கிட முடியும். மேலும், பார்வையாளர்கள் திபெத்திய கைத்தறி துணிகளையும், பாய்கள் மற்றும் தரை விரிப்புகளையும் இங்கே வாங்க முடியும்.
இந்த இடத்தை சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு 1 முதல் 2 மணி நேரம் பிடிக்கும். இந்த இடத்தை எளிதாக அடைவதற்கு டாக்ஸிகள், பேருந்துகள் ஆகியவை கிடைக்கும் மற்றும் இவ்விடத்தை நடந்து சென்றும் எளிதாக அடைய முடியும்.