குச்சு பாணி என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த ராபர்ஸ் கேவ் டேராடூன் நகரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. ஒரு பிக்னிக் ஸ்தலமாக பிரசித்தி பெற்றிருக்கும் இது அனார்வாலா எனும் கிராமத்திற்கு அருகில் உள்ளது.
ராபர்ஸ் கேவ் பிக்னிக் ஸ்தலத்திற்கு செல்ல விரும்பும் பயணிகள் அனார்வாலா கிராமத்திற்கு சென்று அங்கிருந்து 1 கி.மீ மலையேற்றம் செய்து இந்த இடத்தை சென்றடையலாம்.
சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் இந்த குகை கொள்ளைக்காரர்கள் தங்கும் இடமாக இருந்ததாகவும், ஆங்கிலேயப்படைகளிலிருந்து தப்பிக்க அவர்கள் இங்கு பதுங்கி வசித்ததாகவும் கூறப்படுகிறது.
இப்பகுதியில் உள்ள ஒரு மலை அவ்வப்பொது மறைந்து மீண்டும் தோன்றுவதாகவும் கதைகள் உண்டு. சுற்றிலும் மலைகள் வீற்றிருக்க ஒரு அற்புதமான எழில் ஸ்தலமாக இந்த இடம் காட்சியளிக்கிறது.