டெல்லி மாநகரத்திலுள்ள இந்த தரிபா கலான் சாலை விசேஷமான அங்காடிகளைக்கொண்ட முக்கியமான மார்க்கெட் பகுதியாக பிரசித்தி பெற்றுள்ளது. ஒரு காலத்தில் இங்கிருந்த அங்காடிகளில் ரத்தினக்கற்கள், வைரம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றால் ஆன விலைமதிப்புள்ள ஆபரணங்கள் அதிக அளவில் விற்கப்பட்டிருக்கிறன.
இருப்பினும் தற்போது வெள்ளி அலங்கார ஆடைகளுக்காக இந்த மார்க்கெட் பகுதி பிரசித்தமாக அறியப்படுவதுடன் ஜுவெல்லர்’ஸ் ஸ்ட்ரீட் (நகைக்கடை தெரு) என்ற சிறப்பு பெயராலும் அழைக்கப்படுகிறது. நகைக்கடைகள் மட்டுமல்லாமல், அத்தர் எனும் வாசனைத்திரவியமும் அதன் உண்மையான தரத்துடன் இங்குள்ள கடைகளில் அதிகமாக விற்கப்படுகிறது.
தரிபா கலான் எனும் பெயருக்கு ‘ஒப்பில்லாத முத்துக்களின் சாலை’ என்பது பொருளாகும். இந்த சாலை சாந்தினி சௌக் பகுதியிலேயே அமைந்திருக்கிறது. பேரரசர் ஷாஜஹானின் ஆட்சியின்போது இந்த நகைவணிக சாலை புகழ் பெற்று விளங்கியதாக சொல்லப்படுகிறது.
தரிபா கலான் சாலையை ஒட்டியே வேறு பல முக்கியமான ஷாப்பிங் பகுதிகளும் அமைந்துள்ளன. சரோஜினி நகர், காரி பாவ்லி, பிரகதி மைதன், லஜ்பத் நகர் மற்றும் கான் மார்க்கெட் போன்றவை இவற்றுள் குறிப்பிடத்தக்கவை.
அது மட்டுமல்லாமல், தரிபா கலான் சாலைக்கு அருகிலேயே முக்கியமான சுற்றுலா அம்சங்களான இந்தியா கேட், ரெட் ஃபோர்ட், ஜாமா மஸ்ஜித் மற்றும் ஜந்தர் மந்தர் போன்றவையும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.