Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டெல்லி » ஈர்க்கும் இடங்கள் » பிரகதி மைதான்

பிரகதி மைதான், டெல்லி

346

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அமைந்திருக்கும் ஒரு மிகப்பெரிய கண்காட்சித்திடல்தான் ‘பிரகதி மைதான்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் முக்கியத்துவம் கருதி ஒரு சுற்றுலா அம்சமாகவும் இது பிரசித்தி பெற்றிருக்கிறது.

சுமார் 72000 ச.மீ பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த கண்காட்சி வளாகமானது, இந்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ITPO எனப்படும் ‘இந்தியன் ட்ரேட் புரமோஷன் ஆர்கனிசேஷன்’ அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

1982ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த பிரகதி மைதான் பிரசித்தமான புராணா கிலா கோட்டைக்கு எதிரில் அமைந்துள்ளது. காட்சி அரங்குகளுக்காக  61,290 ச.மீ பரப்பளவு கொண்ட இடத்தையும், திறந்த வெளி காட்சித்தளங்களுக்காக 10000 ச.மீ பரப்பளவு கொண்ட இடத்தையும் இந்த வளாகம் பெற்றுள்ளது.

பிரகதி மைதான் வளாகத்தின் உள்ளே மொத்தம் 18 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இதர நிர்வாக கட்டிடங்கள், உணவகங்கள், கலை நிகழ்ச்சி அரங்குகள் மற்றும் ITPO ஸ்தாபனத்தின் தலைமை அலுவலகம் போன்றவை இந்த வளாகத்தின் உள்ளே இடம் பெற்றிருக்கின்றன.

ஒவ்வொரு வருடமும் இந்த பிரகதி மைதான் வளாகத்தில் 70 தேசிய மற்றும் சர்வதேச கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் ‘இந்தியா இண்டர்நேஷனல் டிரேட் ஃபேர்’ எனப்படும் கண்காட்சி மிகப்பெரிய ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது. இதில் 30000 பார்வையாளர்களும் 10000 காட்சியாளர்களும் (நிறுவனங்கள்) கலந்துகொள்கின்றனர். இது தவிர ‘ஆட்டோ எக்ஸ்போ’ மற்றும் ‘வேர்ல்ட் புக் ஃபேர்’ ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்க இதர முக்கிய கண்காட்சிகளாகும்.

பிரகதி மைதான் எனும் பெயருக்கு ‘வளர்ச்சியின் திடல்’ என்பது பொருளாகும். இதன் உள்ளே டிஃபன்ஸ் பெவிலியன், நேரு பெவிலியன், சன் ஆஃப் இந்திய பெவிலியன் மற்றும் இந்திரா பெவிலியன் என்ற பெயர்களில் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு கலையரங்கமும் இந்த வளாகத்தில் உள்ளது. ராக் இசை நிகழ்ச்சிகள் அவ்வப்போது இந்த அரங்கத்தில் நடத்தப்படுகின்றன. ஏனைய கலை நிகழ்ச்சிகளின் அரங்கேற்றத்துக்கும் இந்த அரங்கம் உகந்ததாக உள்ளது.

ஒவ்வொரு வருடமும் டெல்லி வருமான வரித்துறை இந்த மைதானத்தில் 150 சேவை அறைகளை அமைத்து பொதுமக்கள் தங்கள் வருமானக் கணக்கை அளிப்பதற்கு வசதி செய்து தருகிறது.

ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா எனும் அமைப்பால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘வில்ஸ் லைஃப்ஸ்டைல் இந்தியன் ஃபேஷன் வீக்’ எனும் நிகழ்ச்சி இந்த மைதானத்தில் 2008 மற்றும் 2009ம் வருடங்களில் நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun