Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டெல்லி » ஈர்க்கும் இடங்கள் » ஷாப்பிங்

ஷாப்பிங், டெல்லி

34

டெல்லி மாநகரத்தில் ஷாப்பிங் செய்வதைப்போன்ற ஒரு அற்புதமான அனுபவம் வேறு எந்த மாநகரத்திலும் கிடைக்காது என்பதே உண்மை. ஆடம்பரமான மால் அங்காடிகள் முதல் நடைபாதை பஜார் கடைத்தெரு வரை டெல்லியில் ஏராளம் நிரம்பியுள்ளன.

நகரின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான பஜார்கள் நிரம்பியுள்ளன. நீங்கள் என்ன வாங்க வேண்டுமோ அந்த பொருளுக்கென்றே ஒரு விசேஷ பஜார் இந்த டெல்லி நகரத்தில் இருக்கும். ஆடைவகைகள் முதல் மின்னணு சாதனங்கள் வரை இந்த நகரத்தில் கிடைக்காத பொருளே இல்லை.

 

டெல்லியில் உள்ள மார்க்கெட் பகுதிகளும் அவற்றின் விசேஷங்களும்:

ஜன்பத்: ஷாப்பர்ஸ் பாரடைஸ் என்று பிரசித்தமாக அழைக்கப்படும் டெல்லி நகரத்தின் முக்கியமான மார்க்கெட் பகுதியாக இந்த ஜன்பத் மார்க்கெட் புகழ் பெற்றுள்ளது. நவநாகரீக உடைகள், விலை மலிவான நகைகள், செயற்கை வைர நகைகள், வண்ணமயமான வீட்டு அலங்கார பொருட்கள், கைவினைப்பொருட்கள், கலைப்பொருட்கள், புத்தகங்கள் மற்றும் பட்டியலிடமுடியாத இன்னும் எத்தனையோ பொருட்களை இந்த ஜன்பத் மார்க்கெட்டில் பயணிகள் வாங்கலாம்.

திபெத்திய அகதிகள் இப்பகுதியில் அதிகமாக வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. போலிப்பொருட்கள் மற்றும் பலவந்த விற்பனை போன்றவற்றை சமாளிக்கும் மனதிடத்துடன்  பயணிகள் கவனமாக இருப்பதும் அவசியம்.

திபெத்தியன் மார்க்கெட்: திபெத்திய கைவினைப்பொருட்கள், பித்தளை அழகுபொருட்கள், தங்கா எனப்படும் பௌத்த ஓவியங்கள், வெள்ளி பொருட்கள், இசைக்கருவிகள் மற்றும் சுவர் அலங்கரிப்பு சட்டகங்கள் போன்றவை இங்கு கிடைக்கும் ஏராளமான பொருட்களில் ஒரு சிலவாகும்.

சோர் பஜார்: திருட்டு பஜார் என்ற பெயரிலேயே இந்த பழைய பொருள் சந்தை டெல்லியில் இயங்குவது ஒரு ஆச்சிரியமான விஷயம்தான். செங்கோட்டை மற்றும் லஜ்பதி ராய் மார்க்கெட்டிற்கு அருகில் உள்ள இந்த சந்தைப்பகுதியில் உபயோகப்படுத்தப்பட்ட பழைய பொருட்கள் பலவகைகளில் கிடைக்கின்றன.

எது வேண்டுமானாலும் இங்கு கிடைக்கும் ஆனால் அதன் தரம் மதிப்பு குறித்து பயணிகள் மதிப்பிட்டுக்கொண்டு பேரம் பேசி வாங்கவேண்டும். இங்குள்ள வியாபாரிகளிடம் அநாவசிய பேச்சில் ஈடுபடக்கூடாது என்பதும் முக்கியம்.

 

தார்யாகஞ்ச் புக் மார்க்கெட்: நீங்கள் புத்தக ஆர்வலராக இருப்பின் கண்டிப்பாக இந்த மார்க்கெட் பகுதிக்கு விஜயம் செய்ய வேண்டும். பழைய டெல்லி அல்லது ஷாஜஹானாபாத் பகுதியில் உள்ள தார்யாகஞ்ச் எனும் இந்த இடம் இந்திய பதிப்பு வணிகத்தின் கேந்திரமாகவே இயங்குகிறது.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இங்கு ‘கிதாப் பஜார்’ என்ற பெயரில் விசேஷ புத்தக சந்தையும் நடத்தப்படுகிறது. பழைய பதிப்பாக இருந்தாலும், புதிதாக வெளிவந்த புத்தகமாக இருந்தாலும் இந்த சந்தையில் நீங்கள் தேடும் புத்தகம் கண்டிப்பாக கிடைக்கும். உலகிலேயே மிகப்பெரிய வாராந்திர புத்தகச்சந்தையாக இது பிரசித்தி பெற்றுள்ளது.

 

கான் மார்க்கெட்: இந்தியாவிலேயே மிக ஆடம்பரமான பணக்கார சில்லறை வர்த்தக மார்க்கெட் பகுதியாக இந்த கான் மார்க்கெட் புகழ் பெற்றுள்ளது. 1951ம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த மார்க்கெட் பகுதிக்கு எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட அரசியல் தலைவரான கான் அப்துல் காஃபர் கான் அவர்களின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நவீனமான மார்க்கெட் சாலையில் உலகின் மிக ஆடம்பரமான லைஃப்ஸ்டைல் பிராண்டுகளின் ஷோரூம்கள் அமைந்துள்ளன. ரீபோக், நைகி, டாமி ஹில்ஃபிகர், குட் எர்த் மற்றும் ஃபேப் இந்தியா போன்ற பிராண்டுகளின் கடைகள் இவற்றில் ஒருசிலவாகும்.

அதிநவீன ஆடம்பர பொருட்களை விற்கும் மார்க்கெட் பகுதியாக விளங்கும் இந்த கான் மார்க்கெட் உலகிலேயே 21வது பணக்கார மார்க்கெட் ஸ்தலமாக ‘குஷ்மன் அன்ட் வேக்ஃபீல்ட்’ எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் பட்டியலிடப்பட்டுள்ளது.

சமையலறை உபகரணங்கள், புத்தகங்கள், ஆடம்பர இருக்கைச்சாமான்கள், பெயிண்டுகள், பீங்கான் பொருட்கள், கண்ணாடிபொருட்கள், விளக்குகள், துணிவகைகள் மற்றும் ஏராளமான நவநாகரீக ஆடம்பர வாழ்க்கைப்பொருட்களை இங்கு வாங்கலாம்.

கன்னாட் பிளேஸ்: CP என்று சுருக்கமாக பிரபல்யமாக அழைக்கப்படும் இந்த கன்னாட் பிளேஸ் மார்க்கெட் பகுதியில் சில சுவாரசியமான மேற்கத்திய பொருட்களை இந்திய ரூபாயில் வாங்கலாம். பழமையான பெரிய மார்க்கெட் பகுதியான  இது ராஜீவ் சௌக் என்றும் அழைக்கப்படுகிறது.

 

பாலிகா பஜார்: கன்னாட் பிளேஸ் மார்க்கெட்டின் மையப்பகுதியில் உள்ள மிகப்பெரிய தரையடித்தள சந்தை வளாகமே இந்த பாலிகா பஜார் ஆகும். சுமார் 390 கடைகள் இந்த வளாகத்தில் உள்ளன. பெரும்பாலும் வீடியோ டிவிடி, ஆடியோ சிடி, வீடியோ கேம்ஸ் போன்ற பொருட்களை மலிவாக இப்பகுதியில் வாங்கலாம்.

சாகேத் ‘மால்’ பகுதி:  இந்த இடத்தில்தான் டெல்லி நகரத்தின் பிரம்மாண்டமான மால்கள் எனப்படும் ஒருங்கிணைந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வளாகங்கள் உருவாகியிருக்கின்றன. நவீன ஷாப்பிங் ஸ்தலமாக விளங்கும் இந்த சாகேத் பகுதியில் செலக்ட் சிட்டிவாக், டி.எல்.எஃப் மற்றும் எம்.ஜி.எஃப் மெட்ரோபாலிட்டன் போன்ற மால்கள் அமைந்துள்ளன.

 

பஹார்கஞ்ச் மார்க்கெட்: புது டெல்லி ரயில்வே வளாகத்துக்கு எதிரே அமைந்துள்ள இந்த மார்க்கெட் பகுதியில் நகைகள், வாசனைத்திரவியங்கள், சால்வைகள், தரை விரிப்புகள் மற்றும் தபலா போன்ற இசைக்கருவிகள் விற்கப்படுகின்றன.

கமலா நகர்: பிரபல பிராண்டுகளின் ஆடைகள், காலணிகள் தொடங்கி நடைப்பாதை கடைப்பொருட்கள் வரை இந்த மார்க்கெட் பகுதியில் எல்லாமே கிடைக்கின்றன. நிதானமாக ரசித்து ஷாப்பிங் செய்ய இந்த மார்க்கெட் பகுதி மிகவும் ஏற்றதாகும்.

 

ராஜௌரி கார்டன் மார்க்கெட்: இந்த பணக்கார மார்க்கெட் பகுதியானது திருமணப்பொருட்கள் மற்றும் உல்லாச ஆடைகள் அதிகம் விற்கப்படும் இடமாக திகழ்கிறது. அது மட்டுமல்லாமல் பல நவீன மால் வளாகங்களும் இந்த மார்க்கெட் பகுதியில் உள்ளன. இவற்றில் பல பிரசித்தமான உணவகங்களும் சினிமா அரங்குகளும் அமைந்துள்ளன.

சென்ட்ரல் மார்க்கெட், லஜ்பத் நகர்: பைகள், பெட்டிகள், காலணிகள், உடைகள், பாரம்பரிய இந்திய ஆடைகள் போன்றவற்றை வாங்குவதற்கு இது மிகவும் ஏற்ற மார்க்கெட் பகுதி ஆகும். இப்பகுதியில் ஏராளமான மெஹந்திக்கலைஞர்களும் காணப்படுகின்றனர். இவர்களிடம் பயணிகள் தங்கள் கைகளில் மெஹந்தி அலங்காரம் செய்துகொள்ளலாம்.

சரோஜினி மார்க்கெட்: டெல்லியிலுள்ள சுத்தமான மார்க்கெட் பகுதிகளில் ஒன்றாக இந்த சரோஜினி மார்க்கெட் அறியப்படுகிறது. இங்கு சுத்தமான மளிகைப்பொருட்கள், காலணிகள் மற்றும் எக்ஸ்போர்ட் சர்ப்ளஸ் ஆடைகள் போன்றவற்றை வாங்கலாம். ஒவ்வொரு திங்கள் கிழமையும் விடுமுறை நாளாக இந்த மார்க்கெட்டில் அனுசரிக்கப்படுகிறது.

கரோல் பாக்: இந்த பகுதியில் பிரபலமான பிராண்டுகளின் ஷோரூம்கள் உள்ளன. டெல்லியில் செல்வந்தர்களும் முக்கியஸ்தர்களும் இப்பகுதியில்தான் ஷாப்பிங் செய்கின்றனர்.

ஆர்யா சமாஜ் ரோட், அஜ்மல்கான் ரோட் மற்றும் காஃபர் மார்க்கெட் ஆகிய முக்கியமான மார்க்கெட் சாலைகள் இந்த கரோல் பகுதியில் உள்ளன. தரமான புடவைகள், சால்வைகள் மற்றும் இந்திய பாரம்பரிய உடைகளுக்கு இந்த மார்க்கெட் பகுதி பிரசித்தி பெற்றுள்ளது.

சாந்தினி சௌக்: இந்திய பாணியில் ஷாப்பிங் செய்ய விரும்பினால் நீங்கள் விஜயம் செய்யவேண்டிய மார்க்கெட் பகுதி இந்த சாந்தினி சௌக் ஆகும். ஏராளமான மக்கள் திரள் மற்றும் நிறைய சந்துகளை கொண்ட இந்த மார்க்கெட் பகுதியில் பலவிதமான சுவாரசியமான பொருட்களை வாங்கலாம். சுவையான பாரம்பரிய டெல்லி சிற்றுண்டிகளுக்கும் இந்த மார்க்கெட் பிரசித்தி பெற்றுள்ளது.

காரி பாவ்லி: மசாலா வாசனைப்பொருட்களுக்கு இந்த காரி பாவ்லி மார்க்கெட் புகழ் பெற்றுள்ளது. அனைத்து மசாலா வாசனைப் பொருட்களையும் தரமாகவும் விலை மலிவாகவும் இங்கு வாங்கலாம். மசாலா தேயிலைத்தூள், ஏலக்காய்,  இன்னபிற வாசனை சமையல் பொருட்கள் மற்றும் தானியங்கள் போன்றவை இங்கு கிடைக்கின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri