கிழக்கு டெல்லி பகுதியில் உள்ள இந்த ஸ்ரீ உத்தர குருவாயூரப்பன் கோயில் கிருஷ்ண பஹவானுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. 1963ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் மயூர் விஹார் எனும் இடத்தில் அமைந்துள்ளது. டெல்லி மக்கள் விரும்பி விஜயம் செய்யும் கோயில்களில் ஒன்றாக இது பிரசித்தி பெற்றுள்ளது.
கேரள மாநிலத்திலுள்ள குருவாயூரப்பன் கோயிலைப்போன்றே இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ண பஹவானுக்கு உகந்த பண்டிகை தினங்களில் இந்த கோயிலில் விசேஷ பூஜைகள் மற்றும் கொண்டாட்டங்கள் நிகழ்த்தப்படுகின்றன.
ஆன்மீக அம்சங்களுக்காக மட்டுமல்லாமல் சமூகஞ்சார்ந்த செயல்பாடுகளுக்காகவும் இந்த கோயில் பொது மக்களிடையே புகழ் பெற்றுள்ளது. மருத்துவ சேவை, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் போன்றவை இந்த கோயில் மூலமாக வழங்கப்படுகின்றன.
கோயில் சார்பாக ஒரு விழாக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூடத்திற்கான முன்பதிவு மற்றும் பூஜைச்சேவைகள் போன்றவற்றிற்கு இணையம் மூலமாகவும் பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.