Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தேவராயனதுர்க்கா » வானிலை

தேவராயனதுர்க்கா வானிலை

இனிமையான சுற்றுச்சூழல் மற்றும் குளுமையுடன் காணப்படும் தேவராயனதுர்க்கா மலைநகரத்துக்கு வருடத்தின் எல்லா நாட்களிலுமே பயணம் மேற்கொள்ளலாம். இருப்பினும் குளிர்காலம் இங்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாக கருதப்படுகிறது.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூலை வரை): தேவராயனதுர்க்கா மலைநகரம் கோடைக்காலத்தில் மிதமான வெப்பநிலையைக்கொண்டதாக காணப்படுகிறது. இக்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 31° C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° C ஆகவும் உள்ளது. இனிமையான பருவநிலையை கொண்டுள்ளதால் இக்காலத்தில் பயணிகள் இங்கு அதிக அளவில் விஜயம் செய்கின்றனர்.

மழைக்காலம்

(ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை): தேவராயனதுர்க்கா மலைநகரம் மழைக்காலத்தில் கடுமையான மழைப்பொழிவை பெறுகிறது. ஊர் சுற்றிப்பார்ப்பதில் உள்ள சிரமம் மற்றும் பயணச்சிக்கல்கள் கருதி மழைக்காலத்தில் தேவராயனதுர்க்காவுக்கு பயணம் மேற்கொள்ள பயணிகள் விரும்புவதில்லை.

குளிர்காலம்

(நவம்பர் முதல் மார்ச் வரை): குளிர்காலத்தில் தேவராயனதுர்க்கா மலைநகரத்தில் சிதோஷ்ண நிலை மிகக்குளிர்ச்சியுடனும் இனிமையான சூழலுடனும் காணப்படுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை 18° C முதல் 24° C வரை உள்ளது. குளிர்காலம் அதிக அளவில் பயணிகளை இந்த அழகான மலைப்பகுதிக்கு  ஈர்க்கும் வகையில் உள்ளது.